ஆசிரமம் நடத்தி, `நிர்வாண படம்' தயாரித்த போலி சாமியார்சாமி சிலை திருட்டு வழக்கிலும் தொடர்பு அம்பலம்
கொள்ளை கும்பலிடம் நடத்திய விசாரணையில் ஐதராபாத்தில் ஆசிரமம் நடத்தி நிர்வாண பட சி.டி.க்கள் தயாரித்த போலி சாமியார் பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
காட்டிக்கொடுத்த கொள்ளையர்கள்
ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்த நிஜாம் மன்னர்கள் கால கத்திகள், கடந்த மாதம் திருட்டு போய்விட்டன. இந்த திருட்டு தொடர்பாக, ஐதராபாத் சைபராபாத் போலீசார் 2 பேர்களை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அந்த கொள்ளையர்களிடம் இருந்து ஆபாச நிர்வாண பட சி.டி.க்கள், மற்றும் ரூ.4 லட்சம் ரொக்க பணம் ஆகியவை சிக்கின. அவற்றை, ஐதராபாத்தில் உள்ள நித்தியானந்த சுவாமி ஆசிரமத்தில் இருந்து கொள்ளையடித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
ஆசிரமத்தில் சோதனை
அந்த பணம் அனைத்தும் கள்ள நோட்டுகள் என்று அறிந்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், ஐதராபாத்தில் போரபண்டா பகுதியில் காயத்ரி நகரில் உள்ள அந்த ஆசிரமத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். ஆனால், போலீசார் வரும் தகவல் அறிந்த சாமியார் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார்.
இந்த சோதனையின்போது, ஆசிரமத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாண பட சி.டி.க்கள் கைப்பற்றப்பட்டன. பெட்டி பெட்டியாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்த வயாகரா மாத்திரைகள் மற்றும் பாலியல் உணர்வுகளை தூண்டும் `ஸ்பிரே' போன்றவைகளும் சிக்கின.
பெண்களை மயக்கி
ஆசிரமத்துக்கு வரும் பெண் பக்தர்களை மயக்கி இந்த ஆபாச படங்கள் தயாரிக்கப்பட்டதா? அல்லது, சாமியார் பார்த்து ரசிப்பதற்காக வாங்கி வைத்து இருந்தாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சினிமா உலக பிரமுகர்கள் சிலரும் அந்த ஆசிரமத்துக்கு அடிக்கடி வந்து சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. விசாரணையின்போது வெளியான பரபரப்பான தகவல்கள் வருமாறு-
போலி சாமியார் நித்தியானந்த சுவாமியின் உண்மையான பெயர், திரிபுரானந்த சுவாமி. கோதாவரி மாவட்டம், நக்ககவரபு மண்டலம் ஜங்காரெட்டி கிராமத்தை சேர்ந்தவர்.
கொள்ளையிலும் தொடர்பு
சாமியாரிடம் கொள்ளையடித்த பணம் அனைத்தும் கள்ள நோட்டுகள் என்பதால், கள்ள நோட்டு கும்பலுடனும் அவருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மற்றொரு அதிர்ச்சி தகவல் என்னவென்றால், கொள்ளை கும்பலுடனும் அவருக்கு தொடர்பு இருப்பது என்பதுதான். பல கோவில்களில் திருடுவது எப்படி என்பதை விளக்கும் வரைபடங்களும் ஆசிரமத்தில் இருந்து கைப்பற்றப்பட்டு உள்ளன.
பல அரசியல் பிரமுகர்களும் போலி சாமியாருக்கு பின்னணி பலமாக செயல்பட்டு வந்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் போலி சாமியாரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
தினமலர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக