இவர் விடுத்த அறிக்கைக்கு செல்லுமுன்னர் இவரைப்பற்றி ஒரு சிறு குறிப்பு
யார் இந்த சுவாமி ராம்தேவ்
இவரது இயற்பெயர் ராம்கிசன் யாதவ். இவர் 1965ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ந்திகதி அரியானா மாநிலத்தில் பிறந்தார். இவரை சுவாமி ராம்தேவ் (Swami Ramdev), அல்லது பாபா ராம்தேவ், என்று அழைப்பதுண்டு. இவர் ஓர் இந்து சமய துறவியாவார். இவர் பதஞ்சலி முனிவர் இயற்றிய வழியில் யோகா பயில்விப்பதாக கருதப்படுகிறது. அவர் பல பகுதிகளில் நடத்தும் யோகா வகுப்புகளுக்கு பெரும் திரளான மக்கள் பங்கு பெறுகின்றனர். இந்தியாவில் பரவலாக உள்ள ஊழலை எதிர்த்து போராட பாரத் சுவாபிமான் அந்தோலன் என்ற அமைப்பை நிறுவியுள்ளார். சுதேசி சிக்சா,சுதேசி சிகித்சா என்ற முழக்கங்களுடன் இந்தி மொழி முதன்மை மொழியாக அமைய வேண்டும் என்றும் இந்திய ஆயுர்வேதம் முதன்மை சிகிட்சை முறையாக இருக்க வேண்டும் என்றும் தமது கொள்கைகளைப் பரப்பி வருகிறார்.
சர்ச்சைகள்
பல அரசியல் சர்ச்சைகளில் இவர் பெயர் அடிபட்டு வருகிறது.இவர் நடத்தும் ஆசிரமத்தில் உள்ள தொழிலாளர் பிரச்சினை குறித்து தொழிற்சங்க போராட்டங்கள் நடந்தன.
இவர் தயாரித்த ஆயுர்வேத மருந்துகளில் மனித மற்றும் விலங்குகளின் எலும்புக்கழிவுகள் இருந்ததாக மக்களவை அங்கத்தினர் பிருந்தா காரத் ஆய்வுகள் நடத்தி உறுதிப்படுத்தினார். பின்னர் அரசு ஆய்வகங்களில் இதனை சோதித்து கொடுக்கப்பட்ட ஆய்வுபொருட்களில் மூலிகைகள் மட்டுமே இருப்பதாக அறியப்பட்டது.
இவரது கூற்றுகள் ஆயுர்வேதம் ஏய்ட்ஸ்,புற்று நோய் இவற்றை குணமாக்கும் என்பவை பின்னர் ஆய்வு முடிவுகளைக் கொண்டு மறுத்தளவில் தாம் நோயின் கடுமையை நோயாளிகள் எதிர்கொள்ள முடியும் என்று மட்டுமே கூறியதாக பின்வாங்கினார்.
இவர் விடுத்துள்ள அறிக்கை
மதத்தின் பெயரால் மோசடியான செயல்களில் ஈடுபடும் சாமியார்களுக்கும், மத குருக்களுக்கும் மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று யோகா குரு சுவாமி ராம்தேவ் கூறியுள்ளார்.
இதுகுறித்து சிம்லாவில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஏராளமான சாமியார்கள் மோசடி செயல்களில் சிக்கி அவர்கள் மீது பெருமளவில் வழக்குகள் தொடரப்படுவது பெரும் ஏமாற்றத்தையும், கவலையையும் அளிக்கிறது.
குறிப்பாக பாலியல் புகார் களுக்கு ஆளாகும், நிதி முறைகேடுகளில் சிக்கும் சாமியார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
இதுபோன்ற தவறுகளைத் தடுக்க ஒருவர் பாபா (குரு) ஆக குறைந்தபட்ச தகுதியை நிர்ணயிக்க வேண்டியது கட்டாயமாகிறது. இதுதொடர்பாக முன்னணி மதத் தலைவர்களுடன் நான் பேசி வருகிறேன்.
மதத் தலைவர்களின் செயல்பாடுகளைக் கவனிக்க, கண்காணிக்க கமிட்டி என்று எதுவும் தனியாகத் தேவையில்லை. இதற்கான தகுதி வாய்ந்த நபர்கள் நிறையப் பேர் உள்ளனர். அவர்களே இதைப் பார்த்துக் கொள்வார்கள்.
தவறு செய்யும் சாமியார்களுக்கு மரண தண்டனை கொடுத்தால்தான் இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க முடியும் என்றார் ராம் தேவ்.
அறிக்கை தற்ஸ்தமிழ் இணையத்திலிருந்து

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக