இது தொடர்பில் அவ்வீட்டின் உரிமை யாளரான துருக்கியைப் பிறப்பிடமாகக் கொண்ட எஸட் அல்டின்டாகோக்லு (Esat Altindagoglu) விபரிக்கையில், மேற்படி இந்த உருவப்படமானது தனது மனைவி ஸெவினுக்கு 2006 ஆம் ஆண்டில் அவரது பிறந்த தினத்தின் போது லெபனானிய துறவி ஒருவரால் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
இந்த கன்னி மரியாள் உருவப்படம், கடந்த பெப்ரவரி 12 ஆம் திகதியிலிருந்து தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு மேலாக கண்ணீர் வடித்துவருவதாகத் தெரிவித்த அவர், இந்த உருவப்படத்தைத் தரிசிக்க தினசரி 50 முதல் 60 பேர் வரை தனது வீட்டில் கூடுவதாகக் கூறினார்.
பிரான்ஸில் இருந்து மட்டுமல்லாது உலகெங்குமிருந்தும் விசுவாசிகள், கன்னிமரியாள் கண்ணீர் வடிக்கும் அதிசயத்தைக் காண எஸட் அல்டின்டா கோக்லுவின் வீட்டை முற்றுகையிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக