"முன்னோர்கள் தனக்கான நீட்டல் அளவை, தன் உடல் உறுப்புகளில் இருந்தே அமைத்துக் கொண்டார்கள். ஒரு மனிதனின் சராசரி விரல் அளவை, ஒரு விரல்கடை என்று சொல்வார்கள். 12 விரல்கடைகள் சேர்ந்து ஒரு சாண் ஆகும். ரெண்டு சான் சேர்ந்து 1 அடி ஆகும். இந்த மூன்று அளவுகளை அளக்கவும் எங்கேயும் சென்று அளவு கோல் தேட வேண்டிய அவசியம் இல்லை. இந்த அளவுகளை அளக்க நம் கையில் உள்ள விரல்களே போதும். ரெண்டு முழம் சேர்ந்தது ஒரு சிறு கோல், நான்கு சிறு கோல் சேர்த்தது ஒரு பெருங்கோல், 500 பெருங்கோல் கொண்டது ‘ஒரு கூப்பிடு தூரம்’. எனவே கூப்பிடு தூரம் என்பது நீங்கள் நினைப்பது போல் ஒலி சார்ந்த அளவு கோல் அல்ல! நீட்டல் அளவு பற்றிய அந்தக்காலத்து ‘வாய்ப்பாட்டின்’ அடிப்படையில் அமைந்தது. இப்படிப்பட்ட நான்கு கூப்பிடு தூரம் சேர்ந்தது தான் ‘ஒரு காத தூரம்’. வாயால் பாடி (இசையுடன்) மனதில் நினைவு வைத்துக் கொள்வதற்கு ஏற்ப அமைக்கப்பட்டதால் தான் ‘வாய்ப்பாடு’ என்பதற்கு அப்பெயர் வந்திருக்கிறது"
அணு 8 கொண்டது = கதிரெழுதுகள்
கதிரெழுதுகள் 8 கொண்டது = பஞ்சுத்துகள்
பஞ்சித்துகள் 8 கொண்டது = மயிர்முனை
மயிர்முனை 8 கொண்டது = நுண்மணல்
நுண்மணல் 8 கொண்டது = வெண்சிறு கடுகு
வெண்சிறு கடுகு 8 கொண்டது = எள்ளு
எள்ளு 8 கொண்டது = நெல்லு
நெல்லு 8 கொண்டது = விரல்
விரல் 12 கொண்டது = சாண்
சாண் 2 கொண்டது = முழம்
முழம் 2 கொண்டது = சிறுகோல்
சிறுகோல் 4 கொண்டது = பெருங்கோல்
500 பெருங்கோல் = கூப்பிடு தூரம்
4 கூப்பிடு தூரம் = ஒரு காத தூரம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக