Ricky Martin
புயர்ரோரிக்காவைச் சேர்ந்த உலகப் பிரபல பொப் இசைப் பாடகர் றிக்கி மார்ட்டின் தானொரு தன்னின சேர்க்கையாளர் என அறிவிப்புச் செய்துள்ளார்.றிக்கி மார்ட்டின் தனது 3 தசாப்தகால வாழ்க்கையில் தனது இசைத் தொகுப்புகளின் 60 மில் லியனுக்கும் அதிகமான பிரதிகளை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளார்.
கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒருவராகவே தன்னை உணர்வதாக கூறிய றிக்கி மார்ட்டின், தன்னுடைய தன்னின சேர்க்கைத் தொடர்பு குறித்து வெளியுலகிற்கு தெரிந்தால் தனது தொழில் பாதிக்கப்படும் என தனது ஆலோசகர்கள் கூறியமையாலேயே அதனை இதுவரை இரகசியமாக வைத்திருந்ததாக தெரிவித்தார்.
1999 ஆம் ஆண்டு அவரால் வெளியிடப் பட்ட லிவின் “லா விடா லோகா“ பாடலானது 20 க்கு மேற்பட்ட நாடுகளில் முன்னணி பாடலாக பிரபலம் பெற்றது.
இரு வருடங்களுக்கு முன் வாடகைத் தாயொருவர் மூலம் இரு குழந்தைகளுக்கு றிக்கி மார்ட்டின் தந்தையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் “எனது தன்னின சேர்க்கை தொடர்பானது எனக்கு வாழ்வு கொடுத்த ஒரு கொடை என நான் ஒப்புக் கொள்கிறேன்'' எனத் நான் ஒப்புக் கொள்கிறேன்'' எனத் தெரிவித்த றிக்கி மார்ட்டின், இந்த இரகசியத்தை வெளியிட்டதன் மூலம் தன் மனதின் உள்ளே அழுத்திக் கொண்டிருந்த பாரம் குறைந்துள்ளதாக கூறினார்.
Ricky Martin
1980 களில் புயர்ரோரிக்கா பாண்ட் வாத்தியக் குழுவொன்றின் ஒரு உறுப்பினராக தனது இசை வாழ்க்கையை அவர் ஆரம்பித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக