குரோஷிய புரோட்ஸ்கி வாரொஸ் கிராமத்தில் ஊனமுற்ற தனது துணையான பெண் நாரையை விட்டு விட்டு தென்னாபிரிக்காவுக்கு பறந்து சென்ற மேற்படி நாரை, சுமார் 13,000 கிலோமீற்றர் (8,060 மைல்) தூரத்தைக் கடந்து மீளவும் தனது பெண் துணையை வந்தடைந்துள்ளதாக குரோஷிய பத் திரிகையான “யுதர்ன்ஜி லிஸ்ட்“ தினசரி செய்தி வெளியிட்டுள்ளது.
ரோடன் என பெயர் சூட்டப்பட்ட ஆண் நாரையானது குளிர் காலத்தை யொட்டி தனது ஊனமுற்ற துணையான மெலனாவை விட்டு விட்டு தென்னாபிரிக்காவுக்கு ஏனைய நாரைகளுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் பறந்து சென்றது.
எனினும் வாழ்க்கைத் துணையை பிரிந்திருக்க முடியாத ரோடன், உரிய பருவ காலம் முடியும் முன்பே தன்னந்தனியே திரும்பியுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.
அத்துடன் இந்த ஆண் நாரை தனது வாழ்க்கைத் துணையான பெண் நாரையை பராமரிப்பதுடன் தமது குஞ்சுகளுக்கு பறப்பதற்கு பயிற்சியும் அளித்து ஒரு சிறந்த குடும்பத் தலைவன் போன்று செயற்படுவதாக கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக