புதன், 31 மார்ச், 2010

இன முரண்பாட்டின் தீர்வுக்கு இந்தியாவின் முக்கியத்துவங்கள்

இந்தியாவை தெற்காசியாவிலேயே ஓர் பெரும் வல்லரசாகக் கூறலாம். உலகில் இந்தியா நான்காவது பெரிய நிலையான இராணுவத்தைக் கொண்டுள்ளதுடன் பெரும் வளங்களின் கட்டுப்பாட்டையும் கொண்டதாகவுள்ளது. இந்தியா உலகிலேயே இரண்டாவது கூடிய சனத் தொகையையும் உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடாகவும் உள்ளது. இந்தியாவின் மேலாதிக்கம் என்று கூறுகின்றபோது நாம் எண்ணற்ற காரணிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவானது இலங்கை, நேபாளம், பூட்டான், பங்களா தேஷ் மற்றும் அதன் எல்லையை ஒட்டிய நாடுகள் இந்தியாவின் கலாசாரத்தை ஒட்டிய நாடுகளாகவே இருக்கின்றன. இலங்கைக்கான இந்திய உதவிகள் சுதந்திர மடைந்த காலத்தில் இருந்தே கிடைக்கின்றன.

இந்தியாவின் கடந்த கால தமிழர்களுக்கான உதவிகளைச் சுருக்கமாகப் பார்த்தோமானால்,

1. இலங்கையில் 1956ஆம் ஆண்டில் இருந்து சிங்கள தமிழ் கலவரங்கள் நடந்த வேளைகளில் எல்லாம் இந்தியா தலையிட்டு பெரும் அழிவுகளைக் குறைத்துள்ளது.

2. 1977ஆம் ஆண்டில் இருந்து ஈழ விடு தலை அமைப்புகள் தமிழ்நாட்டில் காம் அமைத்து தமது பயிற்சிகளைத் தொடர அனு மதித்தது.

3. 1983இல் இலங்கையில் இனக்கலவரம் உச்சக்கட்டத்தை அடைந்த வேளையில் ஆயிரக்கணக்கான ஈழத் தமிழ் பேசும் மக்கள் தமிழ் நாடு சென்றனர். அவர்களை வரவேற்று இன்றுவரை ஆதரித்து வருகின்றது.

4. முக்கிய விடுதலை அமைப்புகளைச் சேர்ந்த போராளிகளுக்கு பயிற்சி கொடுத்து தேவையான உதவிகளைச் செய்தது.

5. அதன் தொடர்ச்சியாக பல இந்திய மத்திய அரசின் கவர்களை இலங்கைக்கு அனுப்பி தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் நடத்தியது.

6. 1983 ஜுலை இனக்கலவரம் காரணமாக ஏறக்குறைய 200,000 தமிழ் மக்கள் அகதிகளாக தமிழ் நாடு சென்றனர். இன்று வரை அங்கு வாழ்கின்றனர்.

7. தமிழக அரசுகள் ஈழத் தமிழர்களுக்கு சார்பாக பல ஆர்ப்பாட்டங்களை நடத்திய தோடு தமிழ்நாடு சட்ட சபையிலும் ஈழத் தமிழர்களுக்கு சார்பாக பல தீர்மானங்களையும் நிறைவேற்றினார்கள்.

8. இலங்கையின் இன முரண்பாட்டின் விளைவாக இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி பல பிரச்சினைகளை எதிர்நோக்கினார். அதாவது இலங்கையுடன் இந்தியாவின் வரலாறு, கலாசாரம் சார்ந்தது. அடுத்தது தமிழ்நாட்டு தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது அதன் விளைவாக ஜே.ஆர். ஜயவர்த் தனவை பேச்சுவார்த்தை மேடைக்கு கொண்டு வந்தது.

9. இதன் தொடர்ச்சியாக பல சுற்றுப் பேச்சு வார்த்தைகள் தமிழர் பிரதிநிதிகளுடன் தமிழ் நாட்டிலும் டில்லியிலும் கொழும்பிலும் நடத்த உதவியது.

10. பின்னர் இந்திரா காந்தி தனது பாதுகாவலராலேயே சுட்டுக் கொல்லப்பட்ட பின் அவரின் மகன் பிரதமரானதோடு ஈழத் தமிழர் பிரச்சினைகளையும் முக்கிய விடயமாக எடுத்து தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தார்.

11. இக்கால கட்டத்தில், அதாவது 1985இல் திம்பு பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகளை எடுத்ததோடு ஈழ விடுதலை அமைப்புகளையும் அதில் பங்குபற்ற வைத்தார். அப்பேச்சுவார்த்தையில் ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ, புளொட், .யு. எல்.எவ்., விடுதலைப்புலிகள் ஆகியவை தமிழர் சார்பாக பங்குபற்றின. இதன் மூலம் விடுதலை அமைப்புகள் உலகில் ஓர் அங்கீகாரம் பெற்றன.

12. திம்புவுக்கு பின் பல பேச்சுவார்த்தைகள், அதன் தொடர்ச்சியாக இந்திய இலங்கை ஒப்பந்தம் உருவாக்க ராஜீவ் காந்தி முழு விடயத்தையும் கவனித்ததோடு தமிழர் சார்பாக ராஜீவ் காந்தியே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

13. இந்த ஒப்பந்தம் வடகிழக்கு இணைந்த பகுதியில் தமிழ் மக்கள் ஆட்சி புயக் கூடியதாக இருந்தது.

14. ஆனால், அந்த ஒப்பந்தத்தை நடை முறைப்படுத்த இலங்கை அரசு கொண்டு வந்த 13 ஆவது திருத்தச் சட்டம் ஏற்கக்கூடியதாக இருக்கவில்லை.

15. ராஜீவ் காந்தி இந்திய இலங்கை ஒப்பந்தத்தை கையொப்பமிட்டதோடு நின்றுவிடாது 100,000ற்கும் அதிகமான படையினரை அனுப்பி அதை நடைமுறைப்படுத்த உதவினார்.

16. அதை நடைமுறைப்படுத்த முடியாத அளவுக்கு விடுதலைப் புலிகளுக்கும் இந்திய சமாதான படைகளுக்கும் முரண்பாடுகள் ஏற்பட்டதால் இவர்களுக்கு இடையில் மோதல்கள் ஏற்பட்டன. அதனால் அழிவுகள் ஏற்படத் தொடங்கியன.

17. விடுதலைப் புலிகள் தவிர்ந்த சில விடுதலை அமைப்புகளின் உதவியோடு வட கிழக்கு இணைந்த ஆட்சி உருவாக்கப்பட்டு 2 1/2 வருடங்கள் வரை அது நடத்த உதவினார்.

இப்படி இந்தியா தமிழ் மக்களுக்கு செய்த உதவிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆனால், இந்திய அமைதிப் படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 2000 பேர் வரையான இந்திய அமைதிப் படையினர் இறந்ததோடு நூற்றுக்கணக்கில் விடுதலைப் புலிகளும் பொது மக்களும் கொல்லப்பட்டனர்.

இதன் காரணமாகவே எமது மக்கள் இந்தியாவுக்கு எதிரானவர்களாக உள்ளார்கள்.

இந்த விவாதத்தை இங்கு நிறுத்தி, அடுத்த கட்டத்துக்குப் போனோமானால் 1990 இல் இந்திய அமைதிப்படை, இந்திய அரச மாற்றத்தால் திருப்பி அழைக்கப்பட்டது. அதன் பின்பு இந்தியத் தேர்தல் வந்தது. அதன் பிரசார கூட்டமொன்றில் ஸ்ரீபெரும்புதூர் என்ற இடத்தில் ராஜீவ் காந்தி தற்கொலை குண்டுதாரி மூலம் கொல்லப்பட்டார். அக் குண்டுதாரி விடுதலைப் புலிகளைச் சார்ந்த தனு என அடையாளம் காணப்பட்டது.

அதன் பலனாக விடுதலைப் புலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டார்கள். அதன் தொடர்ச்சியாக உலகில் முக்கியமான நாடுகளில் எல்லாம் தடை செய்யப்பட்டார்கள்.
இதனால் 1990இல் இருந்து இந்தியாவில் ஈழத் தமிழ் மக்களது அரசியல் நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டன.

அதன் பின் தமிழ் மக்களது சிங்கள தேசத்துடனான மோதல் தொடர்ந்தது. அரசாங்கங்கள் மாறின. மோதல்கள் 1990இல் இருந்து பிரேமதாஸா அரசாங்கம் சந்திரிகா அரசாங்கம், மஹிந்த அரசாங்கம், என்று கடந்த 19 வருடப் போராட்டம் 18 மே 2009 இல் முடிவுக்கு வந்தது. இந்த 19 வருட போராட்ட காலத்தில் இலங்கை அரசு பல நாடுகளில் உதவிகளைப் பெற்றது. சில நாடுகள் போராட்டத்துக்கு உதவின. உதாரணமாக சீனா, பாகிஸ்தான், ஈரான், ரஷ்யா, இஸ்ரேல், தென் ஆபிரிக்கா, இந்தியா ஆகியவை உதவி செய்த நாடுகளாகும். இங்கு முக்கிய விடயம் யாதெனில் தமிழருக்கெதிரான போருக்கு இந்தியாவை விட கூடுதலாக உதவி செய்த நாடுகளைப் பற்றி நாம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
ஆனால், இந்தியாவை மட்டும் எதிர்த்துக் கொண்டு இருக்கின்றோம்.

எமது மக்கள் அகதிகளாக 47 நாடுகளில் வாழ்வதாக சில அறிக்கைகள் கூறுகின்றன.
அந்த நாடுகளில் கூடுதலானவை ஜனநாயக நாடுகள். அவை விடுதலைப் புலிகளின் நட வடிக்கைகளைத் தடை செய்துள்ளன. அந்நாடுகள் எமக்காக ஏதாவது செய்ய வேண்டும் என எமது மக்கள் வருடக்கணக்காக பிரசாரம் செய்தனர். போராட்ட முடிவு காலங்களில் 70 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து மறியல் போராட்டங்கள் நடத்தினார்கள். ஊர்வலங்கள் நடத்தினார்கள். இலட்சக்கணக்கான மக்கள் பங்குபற்றினார்கள். ஆனால், அந்தந்த அரசாங்கங்கள் குறிப்பிடக் கூடியளவுக்கு தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை. யுத்தத்தை அவர்களால் நிற்பாட்ட முடியவில்லை.

இலங்கை அரசு விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக உலகுக்கு பிரசாரம் செய்திருந்ததால் அவர்களை அழிப்பதற்கு அந்நாடுகள் மறைமுகமாக உதவி செய்தன என்றுதான் கூற வேண்டும். யுத்தம் முடிந்த பின் தான் பல வெளிநாடுகளுக்கு உண்மை விளங்கியது. இங்கு புலம்பெயர் மக்கள் 15 இலட்சத்திற்கு மேல் வாழ்ந்தாலும் அவர்கள் தாம் வாழும் நாடுகளை இந்தியாவைத் தாக்குவது போல் தாக்குவதில்லை.

இந்தியா, இலங்கைக்கு பக்கத்தே உள்ள ஒரு பெரிய நாடு. 102 கோடி மக்கள், பல மொழிகள், பல மதங்கள், பல சகங்கள் அங்கு அவர்கள் சுதந்திரமாக, ஜனநாயகமாக வாழக்கூடிய அரசியல் முறை ஒன்றை வகுத்து வைத்துள்ளார்கள்.

தமிழ் நாட்டில் 70 மில்லியன் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் எமது போராட்ட காலத்தில் பெரும் பங்கை வகித்தவர்கள்.
அங்கு அவர்களுக்கு என்று ஓர் அரசியல் உண்டு. அதற்கு பின் தான் அவர்கள் ஈழத் தமிழர்களின் அரசியலைப் பார்க்க முடியும்.

ஆனால், நாமோ எமது பிரச்சினைக்கு முதலிடம் கொடுக்கவில்லை என்று அவர்களை மிக வெளிப்படையாக எதிர்க்கிறோம். இது அரசியலில் ஓர் இராஜதந்திரமாக இருக்க முடியாது.

வெளிநாட்டு அரசுகள் எமக்கு உதவாததால் நாம் அவற்றை எதிர்க்கவில்லை. வெளி நாட்டு மந்தி ஒருவர் எமக்கு சார்பாக ஒரு சில வார்த்தைகள் கூறிவிட்டால் அதை நாம் பூதாகரமாக பெரிதாகக் காட்டுகிறோம்.

ஆனால் ,இந்தியாவின் விடயத்தில் அப்படியல்ல, அண்மையில் இந்திய வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் நிருபமாராவ் இலங்கைக்கு வந்த போது லண்டனில் உலக தமிழர் பேரவை நடத்திய மாநாட்டில் பித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் ஆகியோர் பங்குபற்றியதால் வெளிநாடு களில் தமிழர்களின் பிரசாரத்தால் தமக்கு பாதகமான நிலைமை வருமோ எனப் பயந்துதான் கொழும்பு வந்ததாக ஊடகங்கள் கூறுவது அவ்வளவு அரசியல் சாணக்கிய மானதல்ல.

ஒவ்வொரு நாடும் வேறு நாடுகளுக்கு உதவும்போது தமது நலனையும் கருத்தில் கொள்ளும். உதாரணமாக வெளிநாட்டு அரசுகள் எமக்கு ஆதரவளிப்பதன் காரணம் அந்நாடுகளிலுள்ள எமது மக்களின் வாக்குகளை எடுப்பது ஒரு நோக்கமாக இருக்கலாம்.
இலங்கை இனப்பிரச்சினை தீர்ந்தால் அகதிகளைத் திருப்பியனுப்பலாம், இது அவர்களது நலன் சார்ந்தது.

இதேபோல் இந்தியாவுக்கும் தமிழ் நாட்டு ஆதரவு பெற வேண்டுமானால் தமிழ் நாடு கூறுவதைக் கேட்க வேண்டும். அதனாலேயே அவர்கள் ஈழத் தமிழர் பிரச்சினையை தீர்க்க முயல்கின்றனர்.

ராஜீவின் கொலை நடந்திருக்காவிட்டால் எமது பிரச்சினை 1990 களிலேயே ஓர் முடிவுக்கு வந்திருக்கலாம்.

மிக முக்கிய விடயம் யாதெனில், உலக நாடுகள் இலங்கைத் தமிழரின் பிரச்சினையை இந்தியாவின் கண்களினூடாகவே பார்க்கின்றன. கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தால் அது விளங்கும். உதாரணமாக இந்தியாவோடு பிரச்சினை கூடியதன் பின் நோர்வே ஒரு மத்தியஸ்த நாடாக வந்தது. அது இந்தியாவின் ஆதரவோடு தான் தமது நடவடிக் கையை செய்ய முடிந்தது. ஒவ்வொரு தரம் தமது நடவடிக்கைகளை நோர்வே இந்தியாவுக்கு அறிவித்துக் கொண்டே இருந்தது.

அதே போல்தான் அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியனவும் இந்தியாவின் நலனுக்கு எதிராகப் போகவில்லை. இந்தியா கூறியதையே செய்தார்கள்.

எனவே தமிழ் பேசும் மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியா சார்பானது என்பது அவ்வளவு சரியானதல்ல. இந்திய உதவியுடன் தான் எமது பிரச்சினையைத் தீர்க்கலாம் என்பதை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டும்.

கலாநிதி ஆ.க.மனோகரன் (லண்டன்)
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல