எதிர்வரும் புதன்கிழமை அன்னவன் பிறந்த நாளாகும். துப்பாக்கியின்றி, குண்டுகளின்றி, அகிம்சை வழியில் யுத்தம் ஒன்றைச் செய்த வர். தந்தை செல்வா செய்த சத்தியாக்கிரகப் போராட்டத்தின் விளைவால்தான் ““பண்டார நாயக்க செல்வநாயகம்'' உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
சமஷ்டி அரசியல் முறை, சுயாட்சி, வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைப்பு, அவ்விரு மாகாணங்களும் தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடம், பாரம்பய தமிழர் தாயகம், உள்ளக சுயநிர்ணயம், தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்ற கோட்பாடுகள் இன்று உரக்கப் பேசப்படுகின்றன. விமர்சிக்கப்படுகின்றன.
இவ்வாறு பேசப்படும் விமர்சிக்கப்படும் கோட்பாடுகளை உருவாக்கியது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனா? இல்லவே இல்லை. இவற்றை உருவாக்கி, உயிர் ஊட்டி வளர்த்தது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் தளபதி அமர்தலிங்கமா? இல்லவே இல்லை. அவ்வாறாயின், வேறு யார் இவற்றிற்கு சொந்தக்காரர்? மாற்றவோ, திருத்தவோ, அழிக்கவோ முடியாத மறுமொழி தந்தை செல்வா என்பதுதான்.
தந்தையால் உருவாக்கி, வளர்த்த கோட்பாடுகள் வீச்சுக் கொண்டு வீசிக் கொண்டிருக்கும் புயலின் எதிர்வுகள் இன்று உணரப்படுகின்றன. எங்கே எப்பொழுது எவ்வாறு அவற்றிற்கு தந்தையார் கால் தடம் பதித்தார்?
அரசியலில் தந்தையின் ஆரம்ப நிலை 1944 ஆம் ஆண்டு ஆங்கில அரசு சோல்ப ஆணைக் குழுவை இலங்கைக்கு அனுப்பியது. இக்குழு இலங்கைக்கு வர முன்பே, கொழும்பு வாழ் வழக்கறிஞர்கள் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர். அக்கூட்டத்திற்கு தந்தையே தலைமை தாங்கினார்.
ஜீ. ஜீ. பொன்னம்பலத்தினால் கல்டேகட் (Caldecott) ஆளுநர் muன் சமபல பிரதிநிதித்துவத் திட்டம் ன்வைக்கப்பட்டது. அதனை ஆளுநர் ஏற்றுக் கொள்ளவில்லை. அத்திட்டம் சோல்பெரி ஆணைக் குழு ன் மீண்டும் வைக்கப்பட வேண்டுமென குரல் கொடுத்தவர் தந்தையே. முக்கியமாக அத்திட்டத்தை சோல்பரி ஆணைக் குழு முன்வைப்பதற்காகவே 1944 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி தமிழ் காங்கிரஸ் கட்சி உருவாக்கப்பட்டது. பொன்னம்பலம் தலைவர், செல்வநாயகம் உப தலைவர் வழக்குரைஞர் சிவசுப் பிரமணியம் செயலாளர் ஆவர்.
சமபல பிரதிநிதித்துவத் திட்டத்தை சோல்பரி ஆணைக்குழு முன் வைப்பதற்கு வேண்டிய ஆவணங்கள், மாற்றார் அபிப்பிராயங்கள் போன்றவற்றை ஒன்று சேர்த்துக் கொடுப்பதற்கு ஒரு ஆள் தேவைப்பட்டது. அன்றைய பேராதனை பல்கலைக்கழகக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மயில்வாகனம் நாகரத்தினம் என்பவர் அச்சேவையில் சேர்க்கப்பட்டார். மயில்வாகனம் நாகரத்தினம் ஒற்றையாட்சி அரசியலமைப்பின்கீழ் வைக்கப்படும் சமபல பிரதிநிதித்துவத்திட்டம் உகந்ததல்ல, சமஷ்டி அரசியல் முறையே இலங்கைக்கு சிறந்தது என எண்ணினார். சமஷ்டி அரசியலமைப்பே இலங்கைக்கு ஏற்றது என ஆணைக் குழுவிற்கு மனு அனுப்பினார். அன்றைய பத்திரிகைகள் அவரது மனுவின் விபரங்கள் யாவற்றையும் வெளியிட்டன. இதனைக் கண்ணுற்ற வருமான பொன்னம்பலம் செல்வநாயகம், சிவசுப்பிரமணியம் ஆகியோர் சீற்றம் கொண்டனர். சிறு மதியாளன் என மயில் வாகனம் நாகரத்தினத்தை வைதனர். தமது கொள்கைக்கெதிராக செயல்பட்டார் எனக் குற்றம் சுமத்தி சேவையிலிருந்து அன்னவரை நீக்கி விட்டனர்.
மயில்வாகனம் நாகரத்தினம் (பிற்காலத்தில் சட்டத்தரணியானார்) 1945 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி சோல்பரி ஆணைக்குழு முன் தோன்றி தனது சமஷ்டி அரசியல் திட்டத்தை முன்வைத்தார். அவ்வேளையிலும் தந்தை செல்வா ஒற்றையாட்சித் திட்டத்தையே ஆதத்தார்.
1947 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ் காங்கிரஸ் சோல்பரி அரசியலமைப்பை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று கோஷம் எழுப்பியது. மக்கள் தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு அமோக வெற்றியைக் கொடுத்தனர். தந்தை செல்வா காங்கேசன்துறை தொகுதியில் சு.நடேசன் (நடேசபிள்ளை) சேர். பொன். இராம நாதனின் மருமகனை எதிர்த்து போட்டியிட்டார். வெற்றி பெற்றார். 1947 ஆம் ஆண்டு தேர்தலின் பின் சோல்பரி அரசியலமைப்பை ஒருவித மாற்றமோ, திருத்தமோ இன்றி ஏற்றுக் கொண்டது தமிழ் காங்கிரஸ். ஜீ.ஜீ. பொன்னம் பலம், அரசாங்கத்தை அமைக்கும் தெற்கின் கட்சிக்கு நம்பிக்கையுள்ள ஒத்துழைப்பு (Responsive Co - orperation) கொடுக்க முன்வந்தார். சோல்பரி அரசியலமைப்பு ஒற்றையாட்சி அடித்தளத்திற்கமையவே வரையப்பட்டது. தந்தை செல்வாவும் பொன்னம்பலத்துடன் அரசாங்கம் அமைக்கும் கட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க உடன்பட்டார். தந்தை செல்வா எழுத்து மூல வாக்குறுதிகளின் அடிப்படையின்பேரில் ஒத்துழைப்பு வழங்க வேண்டு மென்றார். சிங்களம் தமிழும் அரச கரும மொழிகளாக இருக்க வேண்டும். சிங்களக் குடியேற்றம் நிற்பாட்டப்பட வேண்டும். இந்திய வம்சாவளியினருக்கு பிரஜாவுமை வழங்க வேண்டும். தேசியக் கொடியில் தமிழர்களின் சின்னத்திற்கும் இடம் அளிக்க வேண்டும் என்று தந்தை செல்வா கேட்டுக் கொண் டார். தலைவர் பொன்னம்பலம் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. இலங்கை சுதந்திரம் அடைந்தது. தந்தை செல்வா ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் இருந்து கொண்டு சமஷ்டி அரசியலமைப்பையும் கனவு கண்டார். 1948. 02. 04 ஆம் திகதி இலங்கை சுதந்திரம் அடைந்தது. 1948. 02. 14 ஆம் திகதி வீரகேசரியில் தந்தை “இலங்கைத் தமிழன் எதிர் காலம்' என்ற கட்டுரையொன்றை எழுதியிருந்தார். அக்கட்டுரையில் தந்தை பின்வருமாறு விளம்பியிருந்தார்.
““ஒரே ஏக சர்க்காரின்கீழ் தமிழர்களுக்கு எதிர்காலத்தில் இடமில்லை என்பது என் மனதில் தெளிவாகத் தெரிகிறது. தமிழ் மாகாணங்களையும் சிங்கள மாகாணங்களையும் வெவ்வேறாகக் கொண்ட சமஷ்டி சர்க்கால் அவர்கள் பிரவேசிக்க வேண்டும். அல்லது இலங்கையை இரு சுதந்திர டொமினியன்களாகப் பிரிவினை செய்யும்படி செய்தல் வேண்டும்.
ஆனால் அதே சமயத்தில் ஒரு பொது சாம்ராஜ்யத்திலோ, குடியரசிலோ அவர்கள் அங்கற விளங்கல் வேண்டும். இவ்விதப் பிரிவினை பாஷைக் குழுக்களைச் சுற்றி வட்டமிடும் இலங்கை வகுப்புப் பிரச்சினையைத் தீர்க்கவும் ஒரு மார்க்கமாகும்.'' ““எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் அதே சம யத்தில் கடந்த கால, நிகழ்கால எண்ணங்களும் என் மனதில் தோன்றுகின்றன'' என்று அன்று எழுதிய பொழுதும், சோல்பரி அரசியலமைப்பை விட்டு வெளியில் வர தந்தை விரும்பவில்லை. 1948 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 18 ஆம் திகதிதான் தமிழரசுக் கட்சியை உருவாக்கி சமஷ்டி அரசியலை தமிழ் மக்கள் முன் வைத்தார். ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டிருந்த தமிழ் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியில் வந்தார்.
ஆமை போல ஊர்ந்து வந்தாலும் தனது கொள்கைகளை மன உறுதியோடு மனத் தளர்வின்றி மெல்லென செயல்படுத்தினார். மெல்லென பாயும் தண்ணீர் கல்லையும் உருக்கிப் பாயும்.
1956 ஆம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டது. சத்தியாக்கிரகப் போராட்டங்கள் ஒன்றின் பின் ஒன்றாக நடத்தப்பட்டன. அவற்றின் பலனாக 1957 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் திகதி பண்டாரநாயக்கா செல்வநாயகம் ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டது. அதன் மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்களான தமிழர் தாயகத்திற்கு பிரத்தியேக மான அரசியல் தீர்வு வழங்கப்பட்டது. அதிகார பகிர்வு அளிக்கப்பட்டது. அவ்வொப்பந்தத்தின் மூலம் வட மாகாணத்தில் ஒரு பிராந்திய சபை (Regional Council) கிழக்கு மாகாணம் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட பிராந்திய சபைகள் உருவாக்கப்படவிருந்தன.
இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட பிராந்தியங்கள் இணைந்து கொள்வதற்கும் வழிறைகள் வகுக்கப்பட்டன.
பண்டா செல்வா ஒப்பந்தத்தில் எழுதப்பட்டவைதான் இற்றை வரை நடந்தேறி, முடிவில் எல்லாம் அழிக்கப்பட்டுள்ளன. ““இலங்கைத் தமிழன் எதிர்காலம்'' எனும் கட்டுரையை வாசிக்கின்ற பொழுது தந்தை ஒற்றையாட்சிக்குள் இருந்து கொண்டே அதன் பிடியிலிருந்து எவ்வாறு விலகுவது என்பதனைச் சிந்தித் துள்ளார்.
தன்னையே பண்படுத்தி, இக்கட்டுரையில் குறிக்கப்பட்ட விதைகளை கவனமாகப் பொறுக்கி எடுத்துள்ளார். தமிழ் மக்களின் மனதைக் கிளறி, உழுது நன்றாகப் பண்படுத்திய பின் விதைகளைக் கவனமாகவே விதைத்துள்ளார்.
தண்ணீர் ஊற்றி, பசளையிட்டு, பெரும் மரங்களாக்கி, பின் பெரும் தோட்டமாக உருவாக்கி விட்டார்.
ரோமாபுரியை நோக்கித்தான் சகல பாதைகளும் ஓடுகின்றன என்று கூறுவார்கள். 1948 ஆம் ஆண்டே வட்டுக்கோட்டையை நோக்கி பாதை அமைத்துள்ளார். யார் என்ன கூறினாலும் கடைசியில் தந்தை காட்டிய பாதைக்கே வருவர். இது வரலாற்றில் பதிக்கப்படும் தடமாகும். தமிழர் ஒரு தேசிய இனம் பண்டா செல்வா ஒப்பந்தத்தின் மூலம் தமிழர்கள் இந்நாட்டின் தேசிய இனம் என தந்தை செல்வா அடையாளம் காட்டியுள்ளார். தந்தை செல்வா அடையாளம் காட்டியுள்ளார்.
ஒரு நாட்டில் ஒரு தேசிய இனம் இருக்கலாம். ஒன்றிற்கு மேற்பட்ட பல தேசிய இனங்களும் இருக்கலாம். தேசிய இனம் எனும் அந்தஸ்திற்கு தனி நாடு என அர்த்தம் கொடுப்பது தவறு. ஒரு நாட்டின் இறைமைக்கு ஊறு கொடுக்காமல் தேசிய இன உணர்வை வெளிப்படுத்த முடியும். இந்தியாவில் பல தேசிய இனங்கள் உண்டு. என்றாலும் இந்திய நாட்டின் இறைமை நாளுக்கு நாள் இறுக்கம் அடைந்து கொண்டே போகின்றது. தமிழர்களின் அபிலாஷைகளுக்கேற்ற தீர்வு இலங் கையின் இறைமைக்கு இறுக்கத்தைக் கொண்டு வரும்.
பொதுவான பரந்துபட்ட பொருளாதார வளமுள்ள பிரதேசம், அவ்வாறான பிரதேசத்தில் வாழும் மக்களின் பெரும்பான்மையன் பொதுவான மொழி, கலாசாரம், மதம் இவை போன்ற விழுமியங்களைக் கொண்ட மக்கள் ஒரு தேசிய இனம் என சர்வதேச சட்டங்கள் எடுத்து இயம்புகின்றன. ஐ. நா. வின் சாசனங்களும் அவ்வாறே அடையாளம் காணுகின்றன.
மேற்கு வங்காளம், வங்காளி மக்களின் தாயகம், வங்காள மாநிலமாகக் கணிக்கப்படுகின்றது. பல இலட்சம் வங்காளிகள் டில்லியில் வாழ்கின்றனர். ஆனால் அவர்கள் டில்லியில் சிறுபான்மையர்கள். வங்காளிகள் வங்காள தேசத்தை அடித்தளமாக வைத்து ஒரு தேசிய இனமாகக் கருதப்படுகின்றனர். என்றாலும் அது இந்தியாவின் இறைமைக்குள் உட்பட்ட பிரிக்க முடியாத பிரதேசமாகும். அவ்வாறே இலங்கையிலும் அமையும்.
குழுமங்களாக அங்குமிங்கும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தேசிய இன அடையாளத்தை இழக்கின்றனர். அதனால்தான் பேரினவாத சிங்கள அரசாங்கங்கள் 1947 ஆம் ஆண்டு தொடக்கம் சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களை சிறுபான்மையினராக்குகின்றார்கள்.
விஜயனிற்கு முன்பு மகா வம்ச நூலின் பிரகாரம் விஜயனின் வருகைக்கு முன் புத்தர் பெருமான் மூன்று முறை இலங்கைக்கு வந்துள்ளார். நாகர் என்ற இனம் இலங்கையில் பரவலாக வாழ்ந்தனர்.
குறிப்பாக, யாழ்ப்பாணத்திலும் வட மேல் மாகாணத்தின் ஒரு பகுதியிலும் அடர்த்தியாக வாழ்ந்தனர். இயக்கர் இலங்கையின் மிகுதிப் பகுதியில் வாழ்ந்தனர். நாகர் தென் இந்தியாவிலும் வாழ்ந்தனர் என்று வரலாறு கூறுகின்றது.
அவர்கள் திராவிட இனத்தவர்கள் என்பது வரலாற்று ஆசியர்களின் முடிவாகும். இலங்கை வாழ் தமிழர்கள் நாகன் சந்ததியினரென்பதும் கணிப்பாகும். விஜயன் இலங்கைக்கு காலடி வைக்கு முன்பே தமிழர்கள் இலங்கையின் ஒரு பகுதியின் பரந்த பிரதேசத்தை தமது வாழ்விடமாக ஆக்கிக் கொண்டனர்.
தாய் வழி தேசிய இனம்
விஜயன் சிங்கள இனத்தின் பிதாமகன் என்கின்றனர். குவேனியை கைவிட்ட பின்பு விஜயன் திருமணம் செய்து கொண்டான். தென் இந்தியாவில் இருக்கும் மதுரையின் பாண்டிய அரச குமாரத்தியை திருமணம் செய்தான். மகா வம்சம் மகாநாம தேரரால் பாளியில் எழுதப் பட்டது. ஜேர்மன் பேராசியர் கேக்கரால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. அவரே இவ்வாறு விபத்துள்ளார். (1) அத்தோடு மதுரை தமிழ் நாட்டின் எப்பகுதியென்பதனையும் ஒரு சிறு குறிப்பால் விளக்கியுள்ளார். அத்தோடு விஜயனின் தோழர்களான 700 பேருக்கும் பாண்டிய அரசன் மதுரையிலிருந்து பெண்களை அனுப்பினான் என மகா வம்சம் கூறுகின்றது. (2) பாளி மொழியில் “பண்டு' என்ற சொல் பாண்டியரைக் குறிக்கும் என இந்திரபாலா ““இலங்கையில் தமிழர் ஓர் இனக் குழு ஆக்கம் பெற்ற வரலாறு'' எனும் நூலில் கூறுகின்றார்.
சிங்களத் தேசிய இனம் தந்தை வழியான விஜயனின் லம் தோன்றியது என்றால் தமிழ் தேசிய இனம் விஜயனின் மனைவியான தமிழ் வளர்த்த பாண்டிய நாட்டு அரசியின் வழி வந்தது. தாய் வழி வந்தது தமிழ் தேசிய இனமாகும்.
1918 இல் ஏற்பட்ட நிலை
சிங்களத் தலைவர்கள், தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்பதனை பகிரங்கமாக ஏற்றுக் கொண்டனர். 1918 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 7 ஆம் திகதி அன்றைய சிங்களத் தலைவர்கள் தமிழர் ஒருவர் தெவு செய்யக் கூடியதாக தொகுதியை உருவாக்குவதற்கு எழுத்து மூலம் வாக்குறுதி கொடுத்தனர். பின்பு அவ்வாக்குறுதியினை கைவிட்டனர். கைவிட்டதற் கான காரணத்தை வெளிப்படையாகவே கூறினர். (The Tamils, like the Sinhalese and unlike any other people of the Island were in them selves a majority community and as such had reason neither tobe classed with the minorities nor to stand in need of any safeguards) (3) ““இத்தீவில் வதியும் மற்றைய மக்களைப் போ லல்லாது, தமிழர்கள் சிங்களவர்களைப் போல தாங்களாகவே பெரும்பான்மை சகத்தினர் களாகத் திகழ்கின்றார்கள். அதனால் அவர்களை மற்றைய சிறுபான்மை இனத்தவர்களுடன் சேர்த்து, சிறுபான்மையினத்தவர் என வகுப்பதற்கு எதுவித காரணமில்லை. அல்லது ஏதாவது பாதுகாப்பு தேவைப்படும் நிலையிலும் அவர்கள் இல்லை''.
1918 ஆம் ஆண்டு தமிழர்கள் ஒரு தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதனை சிங்களத் தலைவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
பேராசியர் கே. எம். டி. சில்வா
பேராசியர் கே. எம். டி. சில்வா ஒரு வரலாற்று அறிஞர் ஆவார். அன்னார் தனது ஆய்வுக் கட்டுரையில் பின்வருமாறு கூறுகின்றார். (in the political jargon of the day there were two majority communities, the Sinhalese and the Tamils and the minori- ties were the Smaller Racial groups. The situation changed fundamentally after 1922 when instead of two majority com- munities and the minorities, there was one mojority community - The Sinhalese - the tamils now regarding, them selves Increasingly as a minority community. It has remained so ever since) (4) ““அன்றைய அரசியல் சொற் சிலம்பத்தில் சிங்களவர்களும் தமிழர்களும் இரண்டு பெரும்பான்மை சமூகங்களாக இருந்தன. சிறிய குழுமங்களாக இருந்தவர்கள்தான் சிறுபான்மையினராகும்.
1922 ஆம் ஆண்டிற்குப் பின் அடிப்படையே மாறியது. இரண்டு பெரும்பான்மை சமூகங்கள், சிறுபான்மையினர் என்ற நிலைமைக்குப் பதிலாக சிங்களவர் பெரும்பான்மை சகமாகினர். தமிழர்களை சிறுபான்மையினமாக ஆக்கிக் கொண்டனர். அன்றிலிருந்து என்றும் தமிழர்கள் சிறுபான்மையினம் என்று கணிக்கப்பட்டனர்.'' 1948 ஆம் ஆண்டிலேயே ““இலங்கைத் தமிழன் எதிர்காலம்'' என்ற கட்டுரையின் மூலம் தமிழர்கள் மீண்டும் தேசிய இனமாக உயிர்த் தெழ வேண்டுமென தந்தை கனவு கண்டார்.
அதற்கான அடித்தளத்தை ““பண்டாரநாயக்கா செல்வநாயகம்'' உடன்படிக்கையில் கட்டி யெழுப்பி ஒளியேற்றி விட்டார். அந்த சுடரே இன்றும் அணையாது தமிழர்களின் உள்ளத்தில் ஒளி ஊட்டிக் கொண்டிருக்கின்றது.
முஸ்லிம்களும் ஒரு தேசிய இனமே
பண்டாரநாயக்கா செல்வநாயகம் உடன்படிக்கை மூலம் ஸ்லிம்களுக்கும் ஒரு பிராந் திய சபை உருவாக்கப்பட்டது. அவ் உடன்ப டிக்கையின் பிரகõரம் கிழக்கு மாகாணத்தில் கட்டாயமாக இரண்டு பிராந்திய சபைகள் (Regional Councils) இருக்க வேண்டும்.
ஒன்று தமிழர்களுக்கு மற்றையது முஸ்லிம்களுக்கு.
முஸ்லிம்களுக்கு பிராந்திய சபை வழங்குவதன் மூலம் அவர்கள் ஒரு தனிப்பட்ட தேசிய இனம் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது. தமிழர்களைப் போல முஸ்லிம்களுக்கும் தேசிய இனத்திற்கான அடையாளங்கள் யாவும் உள்ளன. தந்தை தனது உடன்படிக்கையின் மூலம் முஸ்லிம்களுக்கும் தேசிய இன அந்தஸ்தை பட்டும் படாமலும் உருவாக்கி விட்டார். இலங்கை மூன்று தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாடு என்பதனை தந்தையார் வெளிப்படுத்தியுள்ளார்.
விடுபட்ட தேசிய உணர்வை உயிர்த்தெழச் செய்தவர் தந்தையே. இது தந்தை எங்களுக்குக் கொடுத்த கொடை. மகாகவி பாரதியே என்னை மன்னிக்க வேண்டும். தந்தையர் “கொடை' என்ற போதினிலே ஒரு சக்தி பிறக்குது எங்கள் மூச்சினிலே.
(1) பக்கம் 59 - The Mahavamsa - Translated by wilhelm Geiger
(2) மேற்குறித்த பக்கம் 59.
(3) பக்கம் 534 - The Life of sir Ponnambalam Ramanathan Vol - ii By M.
Vythilingam
(4) Consitutional Reform and Elective Representation in the 1920's By K. M. De Silva.
சட்டத்தரணி சி.வி. விவேகானந்தன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக