குளம் வெட்டினேன்
ரெண்டு குளம் பாழு
ஒண்ணுல தன்ணியே இல்லை
தண்ணியில்லாக் குளத்துக்கு
மண்ணு வெட்ட மூணுபேரு
ரெண்டு பேரு நொண்டி
ஒருத்தனுக்குக் கையே இல்லை
கையில்லாத கொசவன்
செய்தது மூணு பானை
ரெண்டு பானை பச்சை
ஒண்ணு வேகவே இல்லை
வேகாத பானைக்கும்
போட்டரிசி மூணரிசி
ரெண்டரிசி நறுக்கு
ஒண்ணு வேகவே இல்லை
வேகாத சோற்றுக்கு
விருந்துண்ண மூணுபேரு
ரெண்டு பேரு பட்டினி
ஒருத்தன் உண்ணவே இல்லை
உண்ணாத கொத்தன்
கட்டினது மூணு கோயில்
ரெண்டு கோயில் பாழு
ஒண்ணுல சாமியே இல்லை
சாமியில்லாக் கோயிலுக்கு
ஆடவந்தார் மூணுபேரு
ரெண்டுபேரு மொட்டை
ஒருத்திக்கு மயிரே இல்ல
ஒன்பதாம் வகுப்பு பாடத்தில் வந்த நாடோடிப்பாட்டு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக