புதன், 3 மார்ச், 2010

இன்டர்நெட் வலையில் இன்றும் இருந்து வரும் மிகப் பழைய வெப்சைட்

  • http://symbolics.com/ என்னும் தளமே இன்றைக்கு இயங்கும் தளங்களில் மிகப் பழைய தளமாகும். இது 1985 ஆம் ஆண்டு மார்ச் 15 அன்று பதியப்பட்டது. இன்னும் இது இயங்குகிறது. ஆனால் இதன் வடிவமைப்பு மேம்படுத்தப்படவே இல்லை.

  • உலகின் முதல் முதலாக அதிகம் பயன்படுத்தப் பட்ட இன்டர்நெட் பிரவுசர் 1993 ஆம் ஆண்டில் வெளியான மொசைக் ஆகும். இதுதான் கிராபிகல் இன்டர்பேஸ் கொண்ட முதல் இன்டர்நெட் பிரவுசர். வந்த புதிதில் புயலைக் கிளப்பியது. பலரின் ஆச்சரியத்திற்குக் காரணமாய் இருந்தது. ஆனால் சில மாதங்களிலேயே நெட்ஸ்கேப் நேவிகேட்டர் பிரவுசரால் பின்னுக்குத் தள்ளப்பட்டது. அதன் பின் வந்த இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்குப் பின் இதன் இடமே தெரியாமல் போய்விட்டது..

  • இன்டர்நெட்டில் இயங்கும் தளங்களையும் மற்றவற்றையும் ஆய்வு செய்து கணிப்புகளை வெளியிடும், உலக அளவில் பிரபலமான அலெக்ஸா டாட் காம் (Alexa.com) அலசல் படி, கூகுள் தான் மிகவும் அதிகமாக அணுகப்படும் தளம். சென்ற ஜூன் மாதக் கணக்குப்படி, இன்டர்நெட்டினைப் பயன்படுத்தும் 32% பேர் ஒவ்வொரு நாளும் ஒரு முறையாவது கூகுள் தளத்தில் இறங்கிப் பார்க்கின்றனர்.

  • அதே அலெக்ஸா டாட் காம் கணிப்புப்படி, சென்ற ஜூன் மாதத்தில், அதிகம் பேர் வந்து சென்ற இன்டர்நெட் தளங்கள் வரிசையில், மூன்றாம் இடத்தில் இருந்த யு–ட்யூப் தளத்தை இறக்கிவிட்டு அந்த இடத்தைப் பிடித்த தளம் பேஸ்புக் இணைய தளமே இந்த வளர்ச்சியைப் பெற்றது. மிக வேகமாக வளர்ந்து வரும் இந்த தளம் இந்தவருடம் (2010) கூகுளையும் மிஞ்சிவிடும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

  • யு–ட்யூப் தளம் சென்று உங்களுக்குத் தேவையான வீடியோ கிளிப்பினைத் தேடிப் பார்த்திருப்பீர்கள். இதுவரை மிக அதிகமான பேர் பார்த்த, தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோ கிளிப் Evolution of Dance என்ற வீடியோ தான் இதுவரை அதிகம் பேரால், பல முறை பார்க்கப்பட்ட வீடியோவாகும். 12 கோடியே 10 லட்சம் முறைகளுக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. எனவே இந்த டான்ஸை ஆடியவர் தன் வாழ்நாள் வரை இதனை ஆடியே ஆக வேண்டிய சூழ்நிலையில் உள்ளார்.

  • அமெரிக்காவில் இருந்துதான் மிக அதிகமான எண்ணிக்கையில் ஸ்பேம் மெயில்கள் (Spam Mail) உருவாகி அனுப்பப்படுகின்றன.இன்டர்நெட்டில் உலா வரும் ஸ்பேம் மெயில்களில் மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவில் தான் உருவாக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன.

  • தன் தூதரக அலுவலகத்தினை இன்டர்நெட்டில் தொடங்கிய நாடு ஸ்வீடன். 2007 ஆம் ஆண்டில் ஸ்வீடன் செகண்ட் லைப் என்ற விளையாட்டில், வாஷிங்டன் நகரில் உள்ள தன் தூதராலயம் போல உருவாக்கி பதிந்து அளித்தது. இந்த தளத்திற்கு வருபவர்கள் இதனைச் சுற்றி செல்லலாம். இங்கு காட்டப்பட்டுள்ள படங்களைக் காணலாம். இங்கு தரப்படும் உரைகளைக் கேட்கலாம். ஆனால் விசா எல்லாம் இங்கு வழங்கப்படமாட்டாது.

  • இன்டர்நெட் பிரவுசரில் அடிக்கடி புக் மார்க்குகளை உருவாக்குவதால், அதன் பட்டியல் மிக நீண்டுகொண்டே போகும். இதனை எப்படி நீக்குவது?

எந்த புக்மார்க்கினை நீக்க வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் அதில் ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Delete என்பதை அழுத்தவும். புக்மார்க் நீக்கப்பட்டுவிடும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் ஆப்பராவிலும் இதே வழி செயல்படும்.

  • உங்கள் கம்ப்யூட்டரில் ஒரே ஒரு யூசர் அக்கவுண்ட் மட்டும் உங்கள் பெயரில் உள்ளது. மற்ற யாரும் அதனைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால் எதற்கு தொடக்கத்தில் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் தர வேண்டும்.

கம்ப்யூட்டர் பூட் ஆகித் தொடங்கியவுடன் நேராக நீங்கள் பயன்படுத்தும் வகையில் அதனை மாற்ற Start கிளிக் செய்து பின் Run பாக்ஸில் Control user passwords2 என டைப் செய்திடவும். பின் என்டர் செய்தால் உங்களுக்கான அக்கவுண்ட் கிடைக்கும். இதில் "Users must enter a user name and password to use this computer" என இருக்கும் பாக்ஸில் இருக்கும் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இப்போது ஓகே கிளிக் செய்திடவும். அப்போது உங்களிடம் பாஸ்வேர்ட் கேட்கும். கொடுத்து வெளியேறவும். பின் பாஸ்வேர்ட் தராமலேயே கம்ப்யூட்டரைப் பயன்படுத்தத் தொடங்கலாம். ஆனால் யார் பூட் செய்தாலும் கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். எதற்கும் ஒருமுறைக்கு இரு முறை எண்ணிப் பார்த்து முடிவு எடுங்கள். கவலைப்பட வேண்டாம். பின் ஒரு நாளில் மீண்டும் இன்னொரு யூசர் அக்கவுண்ட் ஏற்படுத்த இதே வழியில் சென்று ஏற்படுத்தலாம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல