இதன் பரப்பு 1087 ஏக்கர் மட்டுமே. இங்கு ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் நிர்வாகம் நடைபெறுகிறது. 1871 வரை போப்பாண்டவர்கள் போப்பின் மாகாணங்கள் (Papal States) எனப்பட்ட பெரிய நிலப்பகுதியிலே அதிகம் செலுத்தி வந்தனர்.
முழு இத்தாலியும் ஒரே இராச்சியமானதும், வத்திக்கான் அதன் ஒரு பகுதியாயிற்று. 1929இல் நடந்த 'லாட்டரன்' உடன்படிக்கையின் படி வத்திக்கான் நகரம் போப்பாண்டவரின் நிர்வாகத்திற்குட்பட்ட தனி இராச்சியமாயிற்று. இதன் தலைவர் போப்பாண்டவராவார்.
இங்கு போப்பாண்டவரின் அரண்மனையும், பல திருச்சபைக் கட்டடங்களும், கிறிஸ்துவ ஆலயங்களும் உள்ளன.
இவ்விராச்சியத்திற்கெனத் தனியான நாணயமும், தபால் தந்தி நிலையங்களும், தபால் முத்திரைகளும், ரெயில்வே நிலையங்களுமுள்ளன.
தேசியக் கொடியும் தனியானது. உலகிலுள்ள கத்தோலிக்கர்களால் அன்பளிப்புச் செய்யப்படும் உதவிகளும், வத்திக்கானில் விதிக்கப்படும் வரிகளும் நாட்டின் வருமானங்களாகும்.
இங்குள்ள நூல் நிலையம் சிறப்பானது. (vatican library) ரோமன் கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த இது 1447இல் கையெழுத்துப் பிரதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. பழைய கையெழுத்துப் பிரதிகளுடனும் நூல்டளுடனும் உலகிலேயே மிகச் சிறந்த நூல் நிலையங்கிளலொன்றாகக் கருதப்படுகிறது.
50,000க்கும் மேற்பட்ட கையெழுத்துப் பிரதிகளும் அவற்றுள் 31,000க்கும் மேற்பட்டவை விலைமதிக்க முடியாத பண்டைய லத்தீன் கிரேக்க நூல்களாகும். தீயினால் தாக்கப்படாத வகையில் நிலவறைகளுள் வைக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக