சனி, 13 மார்ச், 2010
விசித்திரமான சம்பவம்
தென் ஆப்பிரிக்காவில் `பிரபல' கிரிமினல்களில் ஒருவன் பாட் மர்பி. சமீபத்தில் ஒருநாள் இவனது வீட்டை அதிரடியாக முற்றுகையிட்ட போலீசார், வீட்டுக்குள் போதைப்பொருள் ஏதேனும் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதா என்று புரட்டிப் போட்டுத் தேடினர். மர்பியையும் ஆடைகளைக் களைந்து சோதனையிட்டனர். அப்போது அவனது உடம்பிலிருந்து ஆணுறுப்பு `உதிர்ந்து' கீழே விழுந்தது. போலீசார் திகைக்க, தர்மசங்கடமாய் நின்றான் மர்பி. பின் மெல்ல மெல்லத் தான் இரு பால் குணாம்சங்களைக் கொண்டவன் என்றும், செயற்கையான ஆணுறுப்பை அணிந்திருந்தேன் என்றும் தெரிவித்தான். தனது பெண்ணுறுப்பை நீக்க அறுவைச் சிகிச்சை செய்து கொண்டிருப்பதாகவும் கூறினான். ஆனால் அதற்கான ஆவணங்கள் எதையும் அவனால் காட்ட முடியவில்லை. நாம் ஒரு விஷயமாக அலசினால் இது வேறு திசையில் போகிறதே என்று தலையைச் சொரிகின்றனர் போலீசார்.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)





































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக