சாதாரணமாகக் கவனிக்காமல் விடும் விஷயம் சில நேரங்களில் சங்கடத்தையோ, விபரீதத்தையோ ஏற்படுத்திவிடுவது உண்டு.
அப்படியொரு சம்பவம் அமெரிக்காவின் வயோமிங்கில் நடைபெற்றுள்ளது. அந்த வீட்டில் தாமஸ் கத்ரி என்ற 84 வயது முதியவர் தனியாக வசித்து வந்தார். அவ்வீட்டில் சூரிய வெளிச்சம் `பளிச்'செனப் படும் ஓர் அறையில் `பூதக் கண்ணாடி' அதாவது உருப்பெருக்கிக் கண்ணாடி ஒன்று ஸ்டாண்டில் பொருத்தப்பட்டிருந்தது.
ஒருநாள் தாமஸ் வெளியே சென்றிருந்தபோது அவரது வீடு தீப்பற்றிக் கொண்டது. அக்கம்பக்கத்தவர்கள் பதறிப் போய் தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்து வீடு தீயில் முற்றிலுமாகச் சேதமடையாமல் தடுத்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், தீ விபத்துக்குக் காரணம் உருப்பெருக்கிக் கண்ணாடிதான் என்று தெரிய வந்தது. உருப்பெருக்கிக் கண்ணாடியில் `சுள்'ளென்று பட்ட சூரியன், அடுக்கி வைக்கப்பட்டிருந்த கடிதங்கள் மீது குவிந்து `குப்'பென்று நெருப்புப் பற்றிக்கொள்ள வைத்திருக்கிறது. எப்படியெல்லாம் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது?
சனி, 13 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக