அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற ஒரு பழமொழி உண்டு. ஆம், நம் முகத்தில் தெரியும் அந்த அழகு என்பது நிச்சயம் நம் உள்ளத்திலும், உடலிலும் உள்ள ஒரு அழகை, ஆரோக்கியத்தைப் பிரதிபலிக்கும் ஒரு விஷயம் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை... முகம் அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காக அடிக்கடி அல்லது அனுதினமே ரோஸ் பவுடர் வகையறாக்களை உபயோகப்படுத்துதல் சரியா என்ற முதல் கேள்வியோடு சரும நிபுணர், டாக்டர். சரவணனை சந்தித் துக் கேட்ட பொழுது, ""எதையுமே அளவுக்கு மிஞ்சி உபயோகித்தால் ஆபத்தில் தான் கொண்டு விடும். அதுவும் நம் சருமம் என்பது ரொம்பவே மென்மையான ஒன்று.
அதை மென்மையாகத் தான் கையாள வேண்டும். அதிகமாக காஸ்மெடிக்ஸ்களை தொடர்ந்து உபயோகித்து வந்தால், அதிலுள்ள "கெமிக்கல்கள்' தோலின் மீது பட்டுப் பட்டு, தோலுக்கே (சருமத் துக்கே) உரிய இயற்கையான பொலிவை சீரழித்து விடும். சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வின்படி பார்த்தால், தினம் மேக்அப் போடும் பெண்கள் ஒரு ஆண்டிற்கு 2 கிலோ கெமிக்கல்களை தங்கள் உடம்புக்குள் திணித்துக் கொள்கிறார்கள் என்ற ஒரு செய்தி வெளியாகியுள்ளது. எந்த ஒரு அழகு சாதனப் பொருட்களை வாங்கும் பொழுதும், அதில் குறிப்பிட்டுள்ள Expiry Date கட்டாயம் பெண்கள் கவனிக்க வேண்டும். ஆனால், இதை யாருமே கண்டு கொள்வதே இல்லை'' என்ற மருத்துவடம் தொடர்ந்து "ஆரோக்கியமான சருமம் அமைய நாம் என்னென்ன வழிறைகளை கடைப்பிடிக்க வேண்டும்?' என்ற கேள்வியை முன் வைத்தபொழுது, ""அதிக அளவு சூரியக் கதிர்களிலிருந்து நம் சருமத்தை நாம் கட்டாயம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இந்த சூரிய வெப்பத்திலிருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற பழக்க வழக்கம் நம் தாத்தா, பாட்டி காலத்திலிருந்தே இருந்து வரும் ஒரு வழக்கம்தான். அந்தக் காலத்துப் பெரியவர்களைப் பாருங்கள், கட்டாயம் ஒரு குடையுடன் தான் வெளியில் செல்வார்கள்.
அதே பழக்கத்தை நாம் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். வெளியில் செல்வதற்கு 20 நிமிடங்களுக்கு முன் அந்த லோஷனை முகம் மற்றும் கைகளில் தடவிக் கொள்ள வேண்டும். ஆண்களின் சருமப் பராமரிப்பு என்று பார்த்தால், புகை பிடிக்காமல் இருந்தாலே போதும், ஆண்களின் சருமம் என்றும் இளமைப் பொலிவு மாறாமல் இருக்கும்.
ஒவ்வொரு முறை முகத்தைக் கழுவும் போதும், மென்மையான சோப் (மொய்ஸ் சரைஸிங் சோப்) உபயோகித்து மென்மையாகக் கழுவ வேண்டும். அதிக வெப்பம் கொண்ட வெந்நீர் அல்லது நீண்ட நேரக் குளியல் இவை இரண்டுமே நம் தோலில் உள்ள எண்ணெய்ப் பசையை நீக்கிடும்.
நாம் சாப்பிடும் உணவும், நம் தோலை இளமையாக அல்லது நம்மை என்றுமே வயது குறைந்தவர்களாகக் காட்டக் கூடிய தன்மை படைத்தது. முடிந்த வரை எண்ணெய் மற்றும் நெய்யில் பொரித்த உணவுகளைத் தவிர்ப்பது, அதிக அளவில் பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் பழங்களை நன்கு மென்று உண்பது, தண்ணீர் மற்றும் இயற்கையான பழச்சாறை குடிப்பது, சமைத்த உணவை வெதுவெதுப் பாக உடனுக்குடன் சாப்பிட்டு விடுவது என கடைப்பிடித்து வந்தாலே போதும், சருமம் பளபளப்பாக இருக்கும்.'' "டாக்டர், விற்றமின் ஈ மாத்திரைகளை அதிகம் எடுத்துக் கொண்டால் நம் சருமம் வயதாவதைத் தடுக்க முடியும் என்கிறார்களே, இது உண்மையா?'
முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள், வகள் ஆகியவற்றை தடுக்கக் கூடிய ஆற்றல் உள்ளது. இந்த விற்றமின் சேர்த்த கிறீம்கள், மாத்திரைகளை ஒரு மருத்துவன் பரிந்துரையின் பேல் உபயோகிக்க வேண்டும்.
அழகான, அமைதியான மனநிலை, உற்சாகமான, நேர்மையான எண்ணங்கள் இவை போதுமே நம்மை, நம் சருமத்தை என்றுமே இளமைப் பொலிவு மாறாமல் வைத்துக் கொள்ள'' என்று முத்தாய்ப்பாய் சொல்லி முடித்தார்.
செவ்வாய், 2 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக