வயது மற்றும் பல்வேறு நிலைகளைக் கடந்து உயர்ந்த நிலைக்கு வருதல், மகிழ்ச்சியான வாழ்க்கை, ஒன்றோ இரண்டோ குழந்தைகளை வளர்த்தல் மற்றும் பிரசவம் என்று பல்வேறு நிலைகளை கடந்த நிலையில் தெளிவான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
ஆனாலும், 35 வயதுக்கு பின்னர், சருமப்பாதுகாப்பு அவசியம் என்கின்றனர் அழகுக்கலை நிபுணர்கள். ஏனென்றால் சருமத்தின் செயற்பாடுகள் மெதுவாக குறைய ஆரம்பிக்கின்றன. இதனால் தோலில் படை, தேமல் போன்ற சரும சிக்கல்கள் தோன்றுகின்றன. மேலும் சருமத்தின் மினுமினுப்பும், பளபளப்பும் குறைய ஆரம்பிக்கும். கண்களைச் சுற்றி கறுப்பாக தோன்ற ஆரம்பிக்கும்.
சருமத்தில் வருவதுபோல் கூந்தலிலும் மாற்றங்கள் ஏற்படும். முடி உதிர்தல், முடி முறிதல், பொடுகுத் தொல்லை, கூந்தல் மினுமினுப்பு மற்றும் ஜொலிப்பு குறைதல் ஆகியவை ஏற்படும். 35 வயது கடந்தவர்கள் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை பேஷியல் செய்து கொள்வது நல்லது.
சிலருக்கு சரும சுருக்கங்கள் இருக்கும். இதனால் இளமை குறைய ஆரம்பிக்கும்.
இதற்கு ''தெர்மோ ஹெர்பல் மாஸ்க்'' போடலாம். இதனால் சருமம் இறுக்கமாகி சுருக்கம் நீங்கும். வயதை குறைத்துக் காட்ட பல பேஷியல்கள் உள்ளன. சருமத்துக்கு தகுந்த பேஷியலை தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால் இளமை உங்கள் வசமாகிவிடும்.
வயதை சரியாக வெளிக்காட்டுவதில் முக்கிய பங்கு வகிப்பது கண்கள்தான்.
கண்களின் ஓரத்தில்... கீழ்ப்பகுதியில் கரட் சாற்றில் நனைத்த பஞ்சை, ஒத்தி எடுத்தால் சுருக்கம் மறையும். சிலருக்கு கண்களின் கீழ் பகுதியில் நீர்க்கட்டு போன்று வீங்கி இருக்கும். இதற்கு காரணம் கொலஸ்ட்ரோலே... இதை நீக்க... முக்கிய மசாஜ் உள்ளது. சிறந்த பியூட்டி பார்லருக்கு சென்று மசாஜ் செய்து அதை நீக்கிவிடுவது நல்லது.
35 வயதை கடக்கும்போது, ஹோர்மோன்களில் சில மாற்றங்கள் நிகழும்.
இதனால் கழுத்துப் பகுதியில் கறுப்பு நிறத்தில் திட்டுக்கள் போன்று பரவும். குறிப்பாக பல பெண்கள் தங்களுடைய வசதியை...
செல்வாக்கை வெளியில் காட்டுவதற்காக...
தங்கச் சங்கிலியை தடிமனாக அணிவார்கள்.
தங்க சங்கிலி உராய்வால் கறுப்பு நிறம் போன்று ஏற்படும். இதற்கு பயறுத் தூள், எலுமிச்சைச் சாறு, ஆகியவற்றை கலந்த கலவையை அந்த இடத்தில் பூசி மசாஜ் செய்து கழுவினால் கறுப்பு நிறம் நீங்கும்.
குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு சருமத்தில் உள்ள செபேஷியல் சுரப்பிகளின் செயற்பாடு குறையும். மினுமினுப்பு குறையும். இதனால் வறட்சி தோன்றி... முதுமை எட்டிப் பார்க்கும்.
35 வயதை கடப்பதால் ரத்த அழுத்தம், நீழிவு ஆகியவை ஏற்படுவதால் மருந்து சாப்பிடுவோம். இதில் உள்ள இரசாயனங்கள் உடலில் கலப்பதாலும் வறட்சி ஏற்படும்.
வாரத்திற்கு ஒருறை எண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் வறட்சியை கட்டுப்படுத்தலாம். படை மற்றும் கரும்புள்ளிகள் இருந்தால் பியூட்டி பார்லருக்கு சென்று மாற்றி சருமத்தை பாதுகாக்கலாம்.
வயது செல்லச் செல்ல கால்களின் மென்மை குறைந்து கரடுரடுத் தன்மைக்கு மாறி வரும். இதற்கு இரவில் தூங்குவதற்கு முன்பாக லேசான சுடுநீரில் எலுமிச்சை சாறு கலந்து கால்களை மூழ்க வைக்கவும்.
கால்மணி நேரம் கழித்து கால்களை எடுத்து...
பாதங்களை தேய்த்துக் கழுவினால் மென்மையாகி அழகாக மாறும். மேலும் உடம்பும் புத்துணர்ச்சி பெறும்.
அதேபோல், கைகளில் சருமம் வறண்டு...
நரம்புகள் வெளியே தெரிந்தால் இளமையாக தோற்றமளிக்காது. நகம் கூட நிறம்மாறி காணப்படும். இதற்கு தினம் காலை, இரவு வேளைகளில் ''ஆன்டி ஏஜிங் கிறீம்'' அல்லது பேபி லோஷன்களை பயன்படுத்தி மசாஜ் செய்தால் ரத்த ஓட்டம் அதிகத்து கைகள் இளமையாகும். 35 வயதில் தலைமுடிக்கு டை போடுவது அவ்வளவு நல்லதல்ல.
இப்படி 35 வயதிலேயே கூந்தலுக்கு டை போடும் பழக்கம் உள்ளவர்கள், கிட்டத்தட்ட 5 வருடங்கள் கழித்து டை போட மாட்டார்கள்.
அதுமட்டுமின்றி, தலைமுடியும் செம்பட்டை நிறத்துக்கு மாறிவிடும். 50 வயதுவரை ஹென்னா பயன்படுத்தலாம். அப்படியே போடும் அவசியம் என்றால், டார்க் பிரவுண், பேர்கன்டி ஷேட் ஆகிய நிறத்தை பயன்படுத்தலாம்.ஹெயர் டையில் இருக்கும் அமோனியா தலைக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். ஆதலால் அமோனியா இல்லாத ஹெயர்டையை பயன்படுத்துவது நல்லது. அமோனியா இல்லாத ஹெயர்டைதற்போது மார்க்கெட்டில் அதிகமாக கிடைக்கின்றன. ஹெயர்டை தொடர்ந்து பயன்படுத்துப வர்களுக்கு படை தோன்றும் வாய்ப்பு அதிகம். ஹெயர் டை பயன்படுத்துபவர்கள் மாதம் ஒருறை ''ஹெயர் ஸ்பா'' செய்து கொள்ளவும்.
''மொய்சரய்ஷர்'', காம்பெக்ட், பவுண்டேஷன் ஆகிய ன்றும் கலந்த கிறீம் பயன்படுத்துவது நல்லது.
கண்களுக்கு காஜல் பென்சிலை பயன்படுத்திய பிறகு, பீலிகளுக்கு கிறீம் நிறத்தில் ஐ ஷேடோ கொடுக்க வேண்டும்.
உதடுகளுக்கு இளநிறத்தில் லிப்ஸ்டிக் போட வேண்டும். இயற்கையாக இருக்கும் நிறம் கெட்டுப் போகாமல் இருக்க ''லிப் பாம்'' பூசிவிட்டு லிப்ஸ்டிக் போடுவது நல்லது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக