அரசியல்வாதியின் கல்லறை
ஆட்சி கவிழுமோ என்ற
அச்சமில்லாமல் உறங்குவது
இதுதான் முதல்முறை
வக்கீலின் கல்லறை
பாவம்
ஜாமீனில் எடுக்க
யாருமில்லை
கண்டக்டரின் கல்லறை
எல்லோருக்கும்
டிக்கெட் வழங்கியவருக்கு
இறைவன் கொடுத்த
நிரந்தர டிக்கெட்
டிரைவரின் கல்லறை
பஸ் இல்லாமலே
பரலோகம் வரை
சென்றுவிட்டார்
மாணவனின் கல்லறை
இதயக் கல்லூரிக்கு
ஸ்டிரைக் அடித்துவிட்டான்
காதலனின் கல்லறை
இங்கும் இவன்
மௌனமாகத்தான்
உறங்குகின்றான்
நீதிபதியின் கல்லறை
ஆண்டவன் அளித்த
அப்பீல் இல்லாத
ஆயுள் தண்டனை
நடிகனின் கல்லறை
மேக்கப் இல்லாமல்
இங்குதான்
முதன்முறையாக
நடிக்கின்றான்
விபச்சாரியின் கல்லறை
தயவுசெய்து இவளை
துணியோடு புதையுங்கள்
கலையை
கட்டெறும்புக்குக் கூட
கற்றுக்கொடுத்து விடுவாள்
டிவி ஊழியரின் கல்லறை
தடங்களுக்கு
வருந்துகிறோம்
கவர்மெண்ட் அதிகாரியின் கல்லறை
எமனுக்கு
லஞ்சம் கொடுக்க
முடியாமல்
செத்துப்போனான்
என்னவளின் கல்லறை
வேறு எவனையோ
நினைத்தாள்
கொலைசெய்து விட்டேன்
இந்தியனின் கல்லறை
இங்குதான்
இவன்
மதவெறியில்லாமல்
உறங்குகிறான்
நிரூபரின் கல்லறை
இறைவனிடம்
பேட்டி எடுக்கச்
சென்றுள்ளான்
வீரப்பனின் கல்லறை
தேவாரம் வந்தாலும்
தேட முடியாத காடு
கணிப்பொறி மென்பொருளாளரின் கல்லறை
If Condition முடிக்காமலேயே
இறந்து விட்டான்
கவிஞனின் கல்லறை
கவலைப்படாதீர்கள்
இனி
பொய் சொல்லமாட்டான்
பெண் சிசுவின் கல்லறை
மனிதர்களே!
இனிமேல்
கொசுவைக் கூட
கொல்லாதீர்கள்
எழுத்தாளனின் கல்லறை
முற்றும்
விவசாயியின் கல்லறை
அறுவடைக்கு
ஆளில்லையே
கிரிக்கெட் வீரனின் கல்லறை
இவன் இறந்துவிட்டதை
ரீபிளே (Replay) செய்தெல்லாம்
பார்க்க முடியாது
தமிழனின் கல்லறை
எமனிடம்
ஆங்கிலம் பேசி
அகப்பட்டுக்கொண்டான்
காந்தியின் கல்லறை
ஆறடிக்குள்
ஒரு
தேசம்
பாரதியின் கல்லறை
கத்திப்பேசாதீர்கள்
கவிதை
எழுதிக்கொண்டிருக்கிறான்
நேருவின் கல்லறை
எப்படி வந்தது
இந்தக் கல்லறையிலிருந்து மட்டும்
ரோஜா வாசம்...?
அன்னை தெரேசாவின் கல்லறை
ஒரு
மனிதநேயம் இங்கே
மௌனம் அனுஷ்டிக்கிறது
யாரும் அழுதுவிடாதீர்கள்
அரவணைக்க வந்துவிடுவாள்
டயானாவின் கல்லறை
டோடியோடு சென்று
வாடிப்போய்விட்டாள்
ராணுவ வீரனின் கல்லறை
எதிநாட்டுப் பெயரை
யாரும்
உச்சரித்துவிடாதீர்கள்
எழுந்துவிடப் போகிறான்
குடிகாரனின் கல்லறை
பட்டை அடித்தவன்
பாடையில் போகிறான்
பால் வியாபாரியின் கல்லறை
இவன் வாயில் ஊற்றிய
கடைசி நேர பாலில்
கலப்படம் இல்லை
செய்தி வாசிப்பாளரின் கல்லறை
வாழ்க்கை இத்துடன்
முடிவடைகிறது
வணக்கம்!!!
செவ்வாய், 2 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக