செவ்வாய், 2 மார்ச், 2010

இஸ்ரேலிய மேற்குலக மோதலுக்கு வழிவகுத்த ஹமாஸ் தளபதியின் கொலை

இஸ்ரேல் பலஸ்தீன விவகாரத்தில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஏனைய மேற்குலக நாடுகள் இஸ்ரேலுக்கே ஆதரவாக இருந்தவை. ஆனால், இப்போது பிரிட்டன் உட்பட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் அவுஸ்திரேலியாவும் இஸ்ரேல் மீது கடும் ஆத்திரத்தில் உள்ளன.

பலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தின் தளபதிகளில் ஒருவரான மஹ்முத் அல் மபோஹ் (Mahmoud al-Mabhoub )கடந்த மாதம் 20 ஆம் திகதி துபாயில் கொலை செய்யப்பட்ட விவகாரமே இதற்குக் காரணம்.

இஸ்ரேலிய அரசின் உளவு அமைப்பான மொஸாட்டினால் மபோஹ் கொலை செய்யப் பட்டதாக நம்பப்படுகிறது.

இஸ்ரேல் மீதான மேற்குலக நாடுகளின் கோபத்திற்குப் பிரதான காரணம் மபோஹ் வின் கொலை அல்ல. இக்கொலைத் திட்டத்திற்காக துபாய்க்கு சென்ற அனைவரும் போலியான ஐரோப்பிய மற்றும் அவுஸ்திரேலிய கடவுச் சீட்டுகளைப் பயன் படுத்தியுள்ளனர்.
இதுவே ஐரோப்பிய நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் ராஜதந்திர மோதலை ஏற்படுத்தியுள்ளது.

ஹொலிவூட் திரைப்படப் பாணியில்...

இஸ்ரேலிய கவர்கள் என சந்தேகிக்கப் படும் கொலையாளிகள் ஹொலிவூட் சாகஸத் திரைப்படப் பாணியில் இக்கொலைத் திட்டத்தை நிறைவேற்றியுள்ளனர்.

அவர்களில் சிலர் தலைக்கு விக்வைத் திருந்தார்கள். சிலர் முகத்தில் போலித் தாடிகள் இருந்தன. இலகுவில் ஒட்டுக்கேட்க முடியாத தொலைபேசிகள் மூலம் உரையாடினார்கள். ஆனால், எல்லாக் குற்றவாளிகளும் ஒரு தடயத்தையாவது விட்டுச் செல்வார்கள் என்ற துப்பறியும் நிபுணர்களின் கூற்றுக்கு ஏற்ப, இந்த இஸ்ரேலியத் தாக்குதல் அணியினர் ஒரு விடயம் குறித்து அதிகம் கவனிக்கத் தவறி விட்டனர். பாதுகாப்பு விழிப்புணர்வு மிகுந்த துபாயில் பொருத்தப்பட்ட கண்காணி ப்புக் கமெராக்கள் குறித்து அவர்கள் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை.

துபாய் பொலிஸார் சேகரித்த பல மணித் தியாலங்கள் ஓடும் வீடியோப் பதிவுகளில் தாக்குதல் அணியினரின் ஒவ்வொரு நடமாட்டமும் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இவ்வீடியோ பதிவுகளின் படி,கொலையாளிகள் என சந்தேகிக்கப்படுபவர்கள் ஜனவரி 19 ஆம் திகதி துபாய் விமான நிலையத்தில் வந்திறங்கியமை வீடியோவில் பதிவாகியுள்ளது. அதாவது, கொலைக்கு 19 நிமிடங்களுக்கு ன்னர் உல்லாசப் பிரயாணிகள் போல் வெவ்வேறு நாடுகளிலிருந்து சிறுசிறு குழுவாக இஸ்ரேலியத் தாக்குதல் அணியினர் துபாயை சென்றடைந்துள்ளனர்.

அவர்களில் சிலர் டென்னிஸ் ஆடைகள் அணிந்த நிலையில் மபோஹ்வை பின் தொடர்வது, மற்றும் அக்குழுவின் ஆண்களும் பெண்களும் உல்லாசப் பயணிகள் போல் ஷொப்பிங் செண்டர்களுக்குச் சென்று திரும்பும் காட்சிகளும் பதிவாகியிருந்தன.

மபோஹ் தங்கியிருந்த ஆடம்பர ஹோட்ட லொன்றில் இக்குழுவினல் பலர் தங்கியிருந்தனர். வீடியோ பதிவுகளின்படி, ஜனவரி 20 ஆம் திகதி இரவு 8 .30 மணியளவில் மபோஹ்வின் அறைக்குள் தாக்குதல் அணியினரில் சிலர் நுழைகின்றனர். சிறிது நேரத்தில் அதற்குள்ளிருந்து திரும்பி வருகின்றனர். பின்னர் கோல்வ் விளையாடச் செல்பவர்கள் போல் ஆடையணிந்து கொண்டு ஹோட்டலை விட்டு வெளியே றுகின்றனர். அதன் பின் இரண்டு மணித்தியாலங்களுக்குள் அவர் கள் வெவ்வேறு விமானங்களில் துபாயை விட்டு பறக்கின்றனர்.
அவர்கள் வெளியேறிய பின்னர் தான் மபோஹ் கொலை பற்றிய விடயமே துபாய் பொலிஸாருக்கு தெரியவந்தது.

மபோஹ்வின் இரத்தத் மாதிரியை பரிசோதித்த பிரெஞ்சு ஆய்வுகூடமொன்று அவர் மின்சார அதிர்ச்சிகொடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியது.

20 வருடங்கள் பின்தொடரப்பட்டவர் பலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தின் சிரேஷ்ட தளபதியான மஹ்த் அல் மபோஹ் இஸ்ரே லியர்களின் ஹிட் லிஸ்டில் கொல்லப்பட வேண்டியவர்களின் பட்டியலில் 20 வருடங்களாக முதல் வரிசையில் இருந்தவர்.

1989 ஆம் ஆண்டில் இஸ்ரேலிய இராணுவச் சிப்பாய்கள் இருவரை கடத்திக் கொலை செய்தமையே அவர் இஸ்ரேலினால் இலக்கு வைக்கப்படுவதற்குக் காரணம்.
ஹமாஸ் இயக்கத்தில் இஸ்ஸடீன் அல் கஸாம் பிகேட் எனும் படைப்பிவை உருவாக்கிய மபோஹ்வை கொலை செய்வதற்கு மொசாட் அமைப்பு ஏற்கெனவே பல முயற்சிகளை மேற்கொண்டு தோல்வியைத் தழுவியிருந்தது.

கடந்த பல வருடங்களாக சிரியாவில் அவர் தங்கியிருந்தார். பலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இயங்கும் ஹமாஸ் இயக்கத்தின ருக்காக ஆயுதங்களை வாங்குவதற்கு ஆயுத கவர்களை சந்திப்பதற்ககாக அடிக்கடி துபாய்க்கு வருவதை வழக்கமாகக் கொண்டி ருந்தார்.

50 வயதான மபோஹ், இறுதியாக ஈரானிய ஆயுத விநியோகஸ்தர் ஒருவடமிருந்து ஆயுதம் வாங்குவதற்காகவே துபாய்க்கு சென்றதாகவும் அவர் அந்த ஆயுத பேரத்தை முடிப்பதற்கு முன்னர் மபோஹ்வை "முடித்து விடுவதே' மொஸாட் கவர்களின் இலக்காக நிர்ணயிக்கப்பட்டதாகவும் இஸ்ரேலியப் புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இக்கொலை தொடர்பாக ஆராய்ந்த துபாய் பொலிஸாரால் முதலில் 11 சந்தேக நபர்கள் குறித்து தகவல்வெளியிடப்பட்டது. அவர்கள் அனைவரும் ஐரோப்பிய கடவுச்சீட்டுகளை வைத்திருந்தவர்கள் என துபாய் பொலிஸார் அறிவிக்க, இஸ்ரேலிய ஐரோப்பிய இராஜ தந்திர மோதல் ஆரம்பானது. கொலைச் சந்தேக நபர்களில் சிலர் ராஜதந்திகளுக்கான கடவுச்சீடடுகளை பயன்படுத்தியுள்ளதாகவும் துபாய் பொலிஸார் கூறுகின்றனர்.

கடந்த செவ்வாயன்று மேலும் 15 பேரின் விவரங்கள் வெளியிடப்பட்டன.

துபாய் பொலிஸார் அறிவித்த 26 சந்தேக நபர்களில் 12 பேர் பிரித்தானியக் கடவுச் சீட்டுகளை பயன்படுத்தியுள்ளனர். 6 பேர் அயர்லாந்து கடவுச்சீட்டுகளையும் தலா 4 பேர் பிரான்ஸ் ஜேர்மன் கடவுச்சீட்டுகளையும் 3 பேர் அவுஸ்திரேலிய கடவுச்சீட்டுகளையும் பயன்படுத்தியுள்ளனர்.

இக்கடவுச்சீட்டுகள் அனைத்தும் தமது அப்பாவிப் பிரஜைகளிடமிருந்து திருடப்பட்டதாகவோ போலியாக தயாரிக்கப்பட்டதாகவோ இருப்பதாக மேற்படி நாடுகள் கூறுகின்றன.

இக்கொலையில் இஸ்ரேல் சம்பந்தப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரம் எதுவுமில்லை என இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் அவிக்டர் லிபர்மன் கூறினார். கேள்வி கேட்ட செய்தியாளர்களை ""நீங்கள் அதிகமாக ஜேம்ஸ் பாண்ட் படங்களை பார்த்திருக்கிறீர்கள் போலிருக்கிறது'' என அவர் கிண்ட லடித்தார்.

ஆனால் எவரும் லிபர்மனின் மறுப்பை முழுமையாக நம்பத் தயாராக இல்லை.
Flying in from Paris, Frankfurt, Rome and Zurich, the team arrived within three hours of each other. In this picture two of the suspects make it through border security in Dubai with their false identities before heading to the luxury hotel

இக்கொலைக்கு உடந்தையாக இருந்த பலஸ்தீனியர்கள் இருவர் ஜோர்டானில் கைது செய்யப்பட்டுள்ளனர். பலஸ்தீனத்தில் ஹமா ஸுக்குப் போட்டியான பத்தாஹ் இயக்கத் தினால் மபோஹ் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் சிலரிடம் உள்ளது. அதே வேளை மபோஹ்வின் ஆடம்பர வாழ்க்கையால் அதிருப்தியுற்று ஹமாஸ் இயக்கம் அவரை கொன்றிருக்கலாம் எனவும் சிலர் கருதுகின்றனர்.
After checking into hotels the previous night, a woman, whose passport bore the name Gail Folliard, joins others at a shopping centre to finalise details of the hit

எவ்வாறெனினும் இக்கொலை நடைபெற்ற விதம், இஸ்ரேலின் மொஸாட் அமைப்பின் மீதே அதிக சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.இக்கொலையின் பின்னணியில் இஸ்ரேல் இருக்கிறது என்பதில் தான் 99 சதவீதம் உறுதியாக இருப்பதாக துபாய் பொலிஸ் தலைவரான லெப்.ஜெனரல் தாஹி கல்பான் கூறி னார்.
Another of the suspects arrives at the shopping centre. The killers had lain in wait for al-Mabhouh, whom Hamas admits was involved in the killing of two Israeli soldiers in 1989, since the previous night

தாக்குதல் அணியினர் புறப்படுவதற்கு முன்பாக அவர்களை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தாக இஸ்ரேலிய வட்டாரங்களை மேற்கோள்காட்டி பிட்டனின் சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது.
The group switched hotels several times and wore disguises including false beards and wigs. Surveillance teams rotated in pairs through the hotel lobby never hanging around for too long and paying for everything in cash. One of the suspects went into the toilet and emerged dressed in a wig and glasses

இஸ்ரேலின் எதிர்க்கட்சித் தலைவியும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான லிவ்னி உட்பட இஸ்ரேலிய அரசியல்வாதிகள் பலர் இக்கொலையை வெற்றிகரமான நடவடிக்கை என புகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mahmoud al-Mabhouh touched down in Dubai around 3pm from Damascus to arrange a shipment of weapons to Gaza. Hamas has not explained why one of its senior commanders, a marked man with several assassination attempts against him already, should have arrived alone without any security. He is seen here at the top of the picture checking in wearing a dark suit

மேற்குலகின் கண்டனங்கள் இந்நிலையில், தமது பிரஜைகளின் ஆவணங்கள் திருடப்பட்டதாகவும் இக் கொலைக்காக துபாய்க்குச் செல்வதற்கு போலிக் கடவுச் சீட்டுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் பிட்ரிடன், பிரான்ஸ், அவுஸ்திரேலியா, ஜேர்மன், அயர்லாந்து ஆகிய நாடுகள் குற்றம் சுமத்தின.
The men followed their target to his room, saw its number - 230 - and the one across the hall - 237. A call was then made and one of the men - using the name Peter Elvinger - booked room 237 from the business suite of another hotel. Five hours later al-Mabhouh was dead  (The Times/YouTube)
அத்துடன் இந்நாடுகளின் வெளிவிவார அமைச்சுகள் தமது நாட்டிற்கான இஸ்ரேலியத் தூதுவர்களை அழைத்து கடும் அதிருப்தியை தெரிவித்தன.

இவ்விவகாரத்தில் அமைதியாக இருக்கப் போவதில்லை என அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் வானொலி பேட்டியொன்றில் கூறினார்.
Al-Mabhouh took no notice of the two men who joined him in the lift on the short ride to the second floor. Dressed in sports gear and carrying tennis rackets, they looked like any other European tourists in the Gulf. He did not realise that they were part of the team who had come to kill him. The Times/YouTube

கடந்த திங்களன்று (15.02.2010) பெல்ஜியத் தலைநகரில் கூடிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளி விவகார அமைச்சர்கள் இக்கொலை குறித்து விசனம் தெவித்ததுடன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கடவுச்சீட்டுகள் துஷ் பிரயோகம் செய்யப்பட்டமை குறித்து கடும் கண்டனம் தெவித்தனர். இதுகுறித்த விசாரணைகளுக்கு இஸ்ரேல் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
Al-Mabhouh was last seen alive leaving the lift after a short visit out of the hotel, apparently to meet a contact. While he was out the killers moved swiftly into place. Four burly men arrived in room 237. Al-Mabhouh returned to the room in which he was killed

இக்கொலை நடவடிக்கை இஸ்ரேலிய அரச பயங்கரவாதத்தின் ஒரு பகுதி என ஈரான் கூறி யுள்ளது. இஸ்ரேலை பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என ஹமாஸ் இயக்கம் கூறியது.
இதேவேளை கடந்த 22 ஆம் திகதி பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கலஸ் சார்கோஸியை பலஸ்தீன ஜனாதிபதி மஹ்த் அப்பாஸ் பரிஸ் நரிகல் சந்தித்துப் பேசினார்.
There was no security camera covering the door to al-Mabhouh’s room and no footage of how the team gained entry. The woman in the squad known as Gail Folliard patrolled the corridor outside. She was seen to distract a hotel guest who appeared at the second floor lift for a few vital seconds to give the killers time to gain access to the room

அப்போது மபோஹ் கொலை குறித்து பிரெஞ்சு ஜனாதிபதி சார் கோஸியும் கண்டனம் தெவித்தார்.

போலி பிரித்தானியாக் கடவுச்சீட்டுகள் இக் கொலைக்கு பயன்படுத்தப்படுவது குறித்து பித்தானிய அரசாங்கத்திற்கு தெரிந்திருக்கும் என அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கூறுவதும் பிரித்தானிய அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.
The Hamas chief was followed by his alleged killers throughout the day. CCTV released by Dubai police show surveillance teams rotating in pairs awaiting his arrival at the luxury hotel (Reuters)
பிரித்தானியாக் கடவுச்சீட்டுகளை தமது இரகசிய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த மாட்டோம் என 1987 ஆம் ஆண்டு இஸ்ரேல் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்விவகாரத்தில் மொஸாட் அமைப்பு அம்பலமாகியுள்ளமை குறித்து பலஸ்தீனியர் கள் மகிழ்ச்சியுற்றுள்ளனர். மறுபுறம், இஸ்ரேலியர்கள் இக்கொலை குறித்து மகிழ்ச்சியுற் றுள்ளனர் என்பது வெளிப்படை.
The hit-squad’ travelled under fake British, Irish, French and German passports to enter the country. The Dubai authorities released the names and photos of the 10 men and a woman wanted for the murder. There are now thought to be 17 people who took part. Gordon Brown has called for an investigation in to the use of British passports (Reuters)


ஆனால் இவ்வளவு பெரிய "ரிஸ்க்' எடுத்து இக்கொலை நடவடிக்கையை மேற்கொள்ளும் அளவுக்கு அல் மபோஹ் பெறுமதியானவர் தானா என்ற கேள்வியை சில இஸ்ரேலிய ஊடகங்கள் எழுப்பியுள்ளன.

மபோஹ், காஸா பிராந்தியத்திற்கு அணு வாயுதங்களை கடத்துபவராக இருந்தால் மட்டுமே இந்த பிரமாண்ட நடவடிக்கையின் மூலம் கொலை செய்யப்படுவதற்கு பெறுமதியானவராக இருப்பார் என இஸ்ரேலிய ஊடக வியலாளர் ஒருவர் கூறியுள்ளார்.
The father of a senior Hamas military commander Mahmoud al-Mabhouh with his son’s picture at his home in the northern Gaza Strip. When al-Mabhouh returned to the hotel at 8.24pm his killers were in place. Police believe he was asphyxiated. By 8.46pm the four killers are shown leaving the second floor, followed closely by their spotters in room 237. Two hours later the team boarded planes to France, Hong Kong and South Africa before doubling back to Europe. Al-Mahbouh’s body was not found until 1.30pm the following afternoon. His room showed no sign of forced entry (Mohammed Salem/Reuters)
மத்திய கிழக்கு சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இறுதிக்கட்ட முயற்சி களை மேற்கொண்டுவரும் நிலையில் இக்கொலை இடம்பெற்றிருப்பதும் அந்நாடுகளை கவலையடைச் செய்துள்ளன.
The mother of captured and killed soldier Ilan Saadon displays her son’s portait in her house in the southern Israeli town of Ashkelon. Israel believes al- Mabhouh was responsible for the abduction and murder (EPA)
இக்கொலை விவகாரத்திலும் போலிக் கடவுச்சீட்டுத் தயாரிப்பின் பின்னணியிலும் இஸ்ரேலிய அரசு இருப்பது நிரூபிக்கப்பட்டால் இஸ்ரேலிய மேற்குலக உறவில் பெரும் விசல் ஏற்படலாம்.

ஆர்.சேதுராமன்

படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து பெறப்பட்டது

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல