ஆங்கில மொழியின் வரலாறு
ஆங்கில மொழியின் வரலாறு 1500 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் வாழ்ந்த ஆங்கிலோ-சக்சன் (Anglo-Saxon) என்ற சிறு மக்கள் குழுவின் மொழியான ஆங்கிலம் இன்று ஒர் உலக மொழியாக இருக்கிறது. 53 நாடுகளில் அரச அலுவல் மொழியாக இது உள்ளது. அறிவியல், வணிகம், ஊடகவியல், அரசியல் என எல்லாத்துறைகளும் இம்மொழியில் நடைபெறுகின்றன. •உலகின் சனத்தொகையில் ஆறில் ஒரு பகுதி மக்களால் பேசப்படும் ஆங்கிலம் அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா, நியூஸ்லாந்து , கனடா (பகுதி) முதன்மை மொழியாகவும் அயர்லாந்து ,தெனாபிரிக்கா நாடுகளின் பெருமளவில் பேசப்படும் மொழியாகவும் உள்ளது.
•இதுவரை ஆக்ஸ்போஃட் அகராதி (Oxford English Dictionary) 500,000 சொற்களை உள்ளடக்கியுள்ள போதிலும் பல புதிய சொற்கள் தினமும் உருவாகின்றன.
•உலக தபால் தொலைத் தொடர்பு மூன்றில் ஒருபகுதியிலும் மற்றய தகவல்கள் 80% கணனியிலும் (பலவடிவில்) உள்ளடக்குகின்றது.
•உலகில் தமது தாய்மொழி தவிர்ந்த 2 ம் மொழியாக 700 மில்லியன் மேலான மக்கள் ஆங்கிலத்தை உபயோகிக்கின்றனர்.
•தினம் வெளியாகும் சஞ்சிகைகள் மற்றும் ஊடகங்கள் (CBS, NBC, ABC, BBC and CBC) ஆங்கிலமொழியில் வெளியிடும் தகவல்கள் உலகின் அரைவாசிக்கும் மேலான மக்களை சென்றடைகின்றது.
•ஐ.நா வில் அங்கம்வகிக்கும் 163 நாடுகளில் ஆங்கிலம் (45), பிரஞ் (26 ), ஸ்பனிஷ் (21), ஆரபிக் (17) இவற்றுடன் மீதமாகவுள்ளவை தமது தாய் மொழியையும் அரச கருமத்தில் உபயோகிக்கின்றன.
•ஆங்கிலம் உலகத்தை ஆட்டிப்படைக்கும் இனையத்தின் தாய்மொழியாகவும் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப விடையத்தில் வல்லமையுள்ள மொழியாகவும் இருந்துவருகின்றது.
•ஆங்கில மொழியில் 540,000 சொற்கள் உள்ளதாக மதிப்பிடப்படுகின்றது. இது ஷ்க்ஸ்பியர் காலத்தில் இருந்ததை விடவும் 5 மடங்கு அதிகமாகும்.
•ஆங்கில அகர எழுத்துக்களில் மிகவும் அதிகமாக பாவிக்கப் படுவது - E , மிகவும் குறைவாக பாவிக்கப்படுவது - Q ஆகும்.
•ஆங்கில மொழியில் மிகவும் சிறியதும் முழுமையானதுமான வசனம் " I am." என்பதே.
•இரு முறை " i " எனும் எழுத்து அடுத்துவரும் ஒரே ஒரு சொல் " skiing " மட்டுமே.
•" mt " எனும் சொல் மட்டுமே " dreamt " இல் முடிவடையும் சொல் என்பதும் குறிப்பிடக் கூடிய அம்சங்களாகும்.
•ஆங்கிலமொழியில Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis எனும் சொல் மிக நீளமானது. அதிகார பூர்வமாக ஏற்க்கப்பட்ட இந்த சொல்லில் 45 எழுத்துக்கள் உண்டு.இதை விடவும் பலநூறு எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட ஆனால் அகராதிகளில் சேர்க்கப்படாத சொல்கள்
உள்ளன
மனிதன் உயிரிழந்த பின்பும் அவனது உடற்பாகங்கள் உயிர் வாழும் நேரம்:
கண் - 31 நிமிடம்
மூளை - 10 நிமிடம்
கால் - 4 மணித்தியாலம்
தசை - 5 நாட்கள்
இதயம் - சில விநாடிகள்
மூளைக்கு வேலை கொடுக்க இதோ சில புதிர்கள்..
1. பதினொன்றோடு இரண்டைச் சேர்ந்தால் ஒன்றாகும். எப்படி?
2. எவ்வளவு முன்னேறுகிறீர்களோ அவ்வளவு விட்டுச் செல்வீர்கள். அது என்ன?
3. தலையிலிருந்து கால் வரை நான் உபயோகப்படுவேன். அதனால் நான் மெலிகிறேன். நான் யார்?
4. இருபத்தைந்தை எவ்வளவு முறை ஐந்தால் கழிக்க முடியும்?
5. இது உங்களை அழ வைக்கும், சிரிக்க வைக்கும், இளமையாக உணர வைக்கும். நொடியில் தோன்றினாலும் வாழ்நாள் முழுவதும் தொடரும். அது என்ன?
6. என்னால் உங்களுக்கு வியர்க்கும்.நீங்கள் பலவீனமாவீர்கள். நான் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிப்பேன். நான் யார்?
7. அதற்கு கைகள் உண்டு, ஆனால் எதையும் பிடிக்க முடியாது; பற்கள் உண்டு, ஆனால் கடிக்க முடியாது; கண்கள் உண்டு, ஆனால் பார்வை கிடையாது. அது என்ன?
8. என்னால் ஓட முடியும், ஆனால் நடக்க முடியாது; எப்போதாவது பாடுவேன், ஆனால் பேச முடியாது; கைகள் உண்டு, ஆனால் விரல்கள் கிடையாது; தலையில்லை, ஆனால் முகம் உண்டு; நான் யார் தெரியுமா?
9. இங்கு பாதைகள் உண்டு, ஆனால் வாகனங்கள் செல்ல முடியாது; இங்கு காடுகள் உண்டு, ஆனால் மரங்கள் இருக்காது. அது எங்கே?
10. எனக்கு நாக்கில்லை, ஆனால் நான் பேசுவேன். உலகில் உள்ள அனைத்து விஷயங்களைப் பற்றியும் எனக்குத் தெரியும். எனக்கு கை, கால் கிடையாது, ஆனால் மேலாடை உண்டு. என்னை யார் என்று தெரிகிறதா?
விடைகள் :
1. 11 மணி நேரம் + 2 மணி நேரம் = 1 மணி
2. கால் தடங்கள்
3. சோப்
4. ஒரு முறைதான் (அதற்குப் பிறகு அது இருபதாகிவிடுமே)
5. நினைவுகள்
6. பயம்
7. பொம்மை
8. கடிகாரம்
9. வரைபடம்
10. புத்தகம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக