எப்படி குழந்தைகள் பிணம் இங்கு வந்தது என்று விசாரித்தபோது அருகில் உள்ள மருத்துவ பல்கலைக்கழக வைத்தியசாலையில் இறந்த குழந்தைகளை ஆற்றில் போட்டு இருப்பது தெரிந்தது.
வைத்தியசாலையில் இறந்த குழந்தைகளை அங்குள்ள பிண அறைகளில் ஒப்படைத்து இருந்தனர். அவற்றை ஊழியர்கள் புதைப்பதற்கு பதிலாக சாக்கடை குழாயில் போட்டுவிட்டனர்.
சாக்கடை தண்ணீரோடு சேர்ந்து குழந்தை பிணங்களும் ஆற்றில் வந்து விழுந்தன. அவை தண்ணீரில் அடித்து செல்லப்படாமல் அங்கேயே மிதந்து கொண்டிருந்தது தெரிந்தது.
21 குழந்தைகள் பிணத்தையும் சுகாதார ஊழியர்கள் மீட்டனர். அலட்சியமாக நடந்து கொண்டதாக 2 வைத்தியசாலை ஊழியர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த குழந்தைகளில் பெரும்பாலோனவை பெண் குழந்தைகள். சீனாவில் பெற்றோர் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சட்டம் உள்ளது. எனவே அந்த குழந்தையை ஆண் குழந்தையாக பெற்றுக் கொள்ளவே விரும்புகின்றனர்.
இதனால் பெண் குழந்தைகள் பிறந்தால் அவற்றை ரகசியமாக கொன்று விடுகின்றனர். அப்படி கொல்லப்பட்ட குழந்தைகளும் இதில் இருக்கலாம் என கருதி அதுபற்றியும் விசாரணை நடந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக