நடிகை ரம்பாவுக்கும், கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபனுக்கும் திருப்பதியில் நாளை மறுநாள் (ஏப்ரல் 8) திருமணம் நடக்கிறது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்கள் மட்டும் கலந்து கொள்கிறார்கள்.
ரம்பா-இந்திரகுமார் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் வருகிற 11-ந் தேதி மாலை 6.30 மணிக்கு நடக்கிறது.
திருமணத்தையொட்டி, நடிகை ரம்பா சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறுகையில், "நான் நடிக்க வந்து, 14 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு ரசிகர்கள் இதுவரை ஆதரவு தந்ததற்காக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கும், இந்திரகுமாருக்கும் திருப்பதியில் வருகிற 8-ந் தேதி திருமணம் நடக்கிறது.
இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம், காதல் திருமணம் அல்ல.
தொழில்முறையில்தான் நாங்கள் சந்தித்தோம். அது கூட ஒரு முறைதான். அவருடைய மேஜிக்வுட்ஸ் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக நான் ஒப்பந்தமானேன்.
என்னிடம் ஒரு தொழிலதிபர் என்ற பந்தா இல்லாமல் அவர் எளிமையாகப் பழகினார். அது எனக்குப் பிடித்திருந்தது.
பின்னர் ஒரு நாள் என் குடும்பத்தினரை அணுகி மிகக் கண்ணியமான முறையில் என்னைப் பெண் கேட்டார். அவருடைய அணுகுமுறை என் குடும்பத்தினருக்கும் பிடித்திருந்தது. அவர் ஒரு திறந்த புத்தகமாக இருந்தார். இரண்டு குடும்பத்தினரும் சந்தித்து பேசி எங்கள் திருமணத்தை நிச்சயம் செய்தார்கள்.
திருமணத்திற்கு பிறகும், என் கணவர் அனுமதியுடன் நான் தொடர்ந்து நடிப்பேன். திருமணத்திற்கு பின் நடிப்பதா இல்லையா என்பதை என் விருப்பத்துக்கே விட்டு விட்டார்கள்.
எனக்கும் என் கணவருக்கும் உள்ள பெயர் பொருத்தம் (ரம்பா - இந்திரன்) எனக்கே ஆச்சர்யமாக உள்ளது.
என்னை எப்போதும் லக்ஷா என்ற என் சொந்தப் பெயரைச் சொல்லித்தான் அவர் அழைப்பார்.
திருமணம் முடிந்த கையோடு நியூஸிலாந்துக்கு தேனிலவு செல்கிறோம். எனக்கு மிகவும் பிடித்த நாடு அது. உடனே குழந்தை பெற்றுக் கொள்வதா இல்லையா என்றெல்லாம் எனக்கு தெரியாதுங்க... பார்க்கலாம்..." என்றார்.
Thatstamil

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக