அதைத் தொடர்ந்து விவாகரத்து பத்திரத்தில் சோயிப் மாலிக் கையெழுத்திட்டார். இதனால் பிரச்சினை சுமூகமாக தீர்ந்துள்ளது.
இரு குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட சமாதானத்தை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் திட்டமிட்டபடி வரும் ஏப்ரல் 15-ம் தேதி சோயப் - சானியா திருமண வரவேற்பு ஹைதராபாதில் நடக்கிறது.
ஆயிஷாவிடம் ஒன்றரை மணி நேரம் விசாரணை!
அதேநேரம் ஆயிஷாவிடம் ஹைதராபாத் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
திருமண ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, ஹைதராபாத்தில், சோயிப் மாலிக்-ஆயிஷா இடையிலான சந்திப்புகள் குறித்த தகவல்களை போலீசார் கேட்டறிந்தனர்.
ஆயிஷாவுக்கு சோயிப் மாலிக் அளித்த நினைவுப்பரிசுகள் குறித்த விவரங்களையும் கேட்டனர். இந்த விசாரணை, 1 1/2 மணி நேரம் நீடித்தது.
தேவைப்பட்டால் மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று ஆயிஷாவிடம் போலீசார் தெரிவித்தனர்.
சோயப் மாலிக்குடன் செக்ஸ், கர்ப்பம்...
சோயிப் மாலிக் தன்னை திருமணம் செய்து கொண்டார் என்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டு வரும் ஆயிஷா, சோயப்புடன் தான் செக்ஸ் வைத்துக் கொண்டதாகவும், அவர் மூலம் தான் கர்ப்பம் அடைந்ததாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: சோயிப் மாலிக் என்னை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தினார். அவர் என்னுடன் இருந்ததற்கு எவ்வளவோ ஆதாரங்கள் உள்ளன. நாங்கள் ஓட்டல் அறையில் பல தடவை சேர்ந்து இருந்திருக்கிறோம்.
ஓட்டலில் நாங்கள் ஒன்றாக இருந்ததை ஓட்டல் ஊழியர்கள் பார்த்துள்ளனர். சோயிப் மாலிக்குடன் நான் வாழ்ந்ததற்கு அடையாளமாக கர்ப்பம் ஆனேன். சோயிப் மாலிக் குழந்தையை என் வயிற்றில் சுமந்தேன்.
அந்த குழந்தை முழுமையாக வளர்ச்சி பெறும் முன்பு கருச்சிதைவு ஏற்பட்டு விட்டது. அதற்கு ஐதராபாத்தில் உள்ள மகப்பேறு மருத்துவர் பாத்திமா சிகிச்சை பார்த்தார். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.
சோயிப் மாலிக் எல்லா விஷயத்திலும் பொய் சொல்கிறார். தினமும் முன்னுக்குப் பின் முரணாக உளறிக் கொண்டிருக்கிறார். அவரது பொய் எடுபடாது" என்றார்.
ஆயிஷா நேற்று சோயிப் மாலிக்குடன் ஒன்றாக நிற்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். தேவைப்பட்டால் மேலும் ஆதாரங்களை வெளியிடுவேன் என்றார்.
இதற்கிடையே, ஆயிஷாவுடன் சோயப் மாலிக் ஒன்றாகத் தங்கியிருந்ததை முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஸாருத்தீன் பார்த்ததாக ஆயிஷாவின் தந்தை சித்திக் தெரிவித்துள்ளார்.





































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக