கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழ திரையுலகில் வலம் வரும் நட்சத்திர நடிகை பூஜா பத்து படங்களில் தான் நடித்திருக்கிறார் என்றாலும் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்து வைத்துள்ளார்.
நான் கடவுள் படத்துக்கு பிற்கு மிகவும் மெச்சூர்டு நடிகையாக அறியப்படும் பூஜாவுக்கு, 'ஹோம் சிக் சென்டிமென்ட்' அதிகமாம்.
தற்போது பெங்களூரில் இருந்தாலும் திடீர் திடீரென இலங்கைக்கு போகும் இவர், அங்கு தன் தாத்தா பாட்டியுடன் கொஞ்ச நாள் இருந்தால் தான் மனது ரிலாக்ஸாகிறது என நட்பு வட்டங்களிடம் கூறிவருகிறார்.
இந்த நிலையில், பூஜாவுக்கு அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்த்துள்ளதாகவும், அவர் ஒரு சிங்களத் தொழிலதிபர் என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால் திருமணத்திற்கு தான் அவசரப்படவில்லை என்று பூஜா கூறி வருவதாகவும் இதனால் வீட்டில் புகைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு பூஜா அளித்துள்ள பேட்டியில், தான் சினிமாவுக்கு முழுக்குப் போடப் போவதாக கூறியுள்ளார்.
அந்த பேட்டியில், நான் கடைசியாக நடித்த சுலந்ததனுனா ஜீவிதே என்ற சிங்கள படம், அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. இதுதான் நான் நடித்த கடைசி படமாக இருக்கும். இனிமேல் நான் சினிமாவில் நடிக்கப்போவதில்லை.
நான் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட போது, எங்க அப்பாவுக்கு அதில் விருப்பம் இல்லை. என்றாலும், என் ஆசைக்கு குறுக்கே நிற்காமல் பரந்த மனதுடன் நடிப்பதற்கு அனுமதித்தார்.
சமீபகாலமாக அப்பாவை சந்திக்கும் உறவினர்கள் என் திருமணத்தை பற்றி பேசுவதால், நான் நடித்தது போதும் என்று அப்பாவும், அம்மாவும் என்னிடம் கேட்டுக்கொண்டார்கள்.
அவர்களின் மனதை நான் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. அதனால் சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்து இருக்கிறேன்.
நான் திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்த வேண்டும் என்று அப்பாவும், அம்மாவும் ஆசைப்படுகிறார்கள். அவர்களின் ஆசையை நிறைவேற்றுவது ஒரு மகள் என்ற முறையில், என் கடமையாக நினைக்கிறேன்.
என் திருமணம் எப்போது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. நடக்கும்போது நடக்கட்டும். எனக்கு வரப்போகிறவர் என்னிடம் அன்பாக இருந்தால் போதும்.
வருங்கால கணவரை பற்றி எனக்கு பெரிய கனவுகள் இல்லை. ஓரளவு எனக்கு பொருத்தமாக இருந்தால் போதும்.
அவருடைய உயரம், நிறம் பற்றி எல்லாம் கவலை இல்லை. சிகரெட் புகைப்பதும், குடிப்பதும் எனக்கு பிடிக்காது. அந்த பழக்கங்கள் இல்லாதவராக இருந்தால் போதும்.
பெரும்பாலான நேரங்களில் நான் இலங்கையில் தங்கியிருந்து என் தாத்தா-பாட்டியை கவனித்து வந்தேன். இனி அதையே முழு நேர வேலையாக செய்யப் போகிறேன்.
தாத்தா-பாட்டியின் கடைசி காலத்தில், அவர்கள் மீது என் அன்பை முழுமையாக செலுத்தப் போகிறேன்' எனக் கூறியுள்ளார் பூஜா.
பூஜா சொல்வதைப் பார்த்தால் அவர் நிரந்தரமாக இலங்கையில் செட்டிலாகப் போகிறார் என்று தெரிகிறது.
Thatstamil





































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக