ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

பெண்களை பாதிக்கும் இருதய நோய்கள்

நீரிழிவு நோய்

உலகில் 70 மில்லியன் பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டி ருக்கும்போது இருதய நோய்கள் வருகிற வாய்ப்பும், மூளைவாதம் ஏற்படுகிற வாய்ப்பும் அதிகரிக்கிறது.

மரபியல் காரணங்கள் குடும்பத்தில் பெற்றோர் அல்லது முன்னோர்களுக்கு இருதய நோய் இருந்தால் அந்தப் பெண்களுக்கும் இருதய நோய்கள் வருகிற வாய்ப்பு அதிகம். இதில் நல்ல செய்தி என்னவெனில் இருதய நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு இருந்தால் போதும், ஆரோக் கியமான வாழ்வியல் முறைகளுக்கு மாறி சுலபத்தில் அவற்றைத் தடுத்து திடமான ஆரோக்கியமான இதயத்துடன் வாழ முடியும். கண்டிப்பாக நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் இருதய நோய்கள் வருகிற வாய்ப்புகள் இருக்கிற பெண்கள் தடுப்பு நடவடிக்கையாக இருதயப் பரிசோதனை களைச் செய்து கொள்ள வேண்டும்.

ஆண்களை ஒப்பிடும்போது இல்லத்தரசிகள் பெரும்பாலும் தங்களைவிட கணவரின் உடல்நலம் பற்றித்தான் அதிகம் கவலைப்படு கிறார்கள். அதிலும் இருதய நோய் போன்ற சில நோய்கள் ஏதோ ஆண்களை மட்டுமே பாதிக்கும் என்பதைப் போல பார்க்கப்படு கிறது. இதனால் ஒரு பெண்ணாக நீங்கள் இருதய நோய்கள் பற்றி தெரிந்திருப்பதும், அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதும் மிக அவசியம். எச்சரிக்கை அறிகுறிகள் பெண்களுக்கு ஒரு வேளை சற்று மாறி இருக்கலாம் அல்லது கவனிக்கப்படாமல் இருக்கலாம். உலகம் முழுக்க இருதய நோய்களை ஏற்படுத்தும் அபாயம் மிகுந்த காரணிகள் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சமமாக இருக் கிறது. ஆனால் மாரடைப்பு வரும் பெண் களுக்கு இருக்கிற எச்சரிக்கை அறிகுறிகள் ஆண்களுக்கு வருவது போல இல்லாமல் இருக்கலாம். உதாரணத்திற்கு ஆண்கள் அடையும் நெஞ்சுவலியைப் போல பெண் களுக்கு வராமல் இருக்கலாம். ஆக ஒரு பெண்ணுக்கு இருதய நோய்களுக்கான எச்சரிக்கை அறிகுறிகள் பற்றித் தெரிந்திருப்பதும், ஆண்களைப் போல அல்லாத அறிகுறிகள் வரலாம் என்பதும் முக்கியமாகத் தெரிந்திருக்க வேண்டும். பெண்களின் இருதயக் கோளாறின் அறிகுறிகள் * மார்பில் அசௌகர்யம், அழுத்துதல், இறுக்கம் அல்லது அதிக பளு போன்ற உணர்வு, நடு மார்பில் வலி, குறிப்பாக இரண்டு மார்பகங்களுக்கு இடையில் அல்லது மார்பு எலும்புக்குப் பின்பாக.

* இந்த அசௌகர்யம் உடலின் மற்ற பாகங்களான கைகளின் மேற்புறம் (ஒன்று அல்லது இரண்டு கைகளிலும்), முதுகு, கழுத்து, தாடை மற்றும் மேல் வயிற்றுக்குப் பரவுதல், மூச்சிரைத்தல், இது தனி யாகவோ அல்லது வசதியற்ற மார்பு நிலையுடன் சேர்ந்தோ இருக்கலாம். மற்ற அறிகுறிகள் விவரிக்க முடியாத சோர்வு, பதற்றம், அதிகப்படியான பதற்றம், ஜீரணமின்மை அல்லது காற்று உருவானது போன்ற வலி,சட்டென்று உருவாகும் ஈர வியர்வை, தலை லேசாகி தளர்ந்து வீழ்தல்.

இருதய நோய்களின் ஆரம்ப அறிகுறிகள் ஆண்களைவிட பெண்களால் வேறு மாதிரி உணரப்படும். பெண்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் மிக மென்மையாக இருக்கும். பொதுவாக அதிகப் படியான வேலை செய்வதால் ஏற்படுகிற சோர்வு, படபடப்பு, மூச்சிரைத்தல், நெஞ்சுவலி போன்றவை ஏற்பட்டால் உடனே இருதய நோய்களுக்காக கவனிக்கப்பட வேண்டும். இருதயத்தில் இருந்து தொடங்கும் பிரச்சினை எந்தவிதமான செயலிலும் மோசமடையக் கூடும். பெண்களுக்கு இருதய நோய்களின் அறிகுறிகளைப் புரிந்துகொள்வது சிரமம் என்பது உண்மைதான். இருந்தாலும் வருமுன் காப்பது எப்போதும் நல்லது. மரபு வழி வரும் பிரச்சினை வயது, இனம் போன்ற மாற்ற முடியாதவை சில இருந்தாலும் வேறு சில வழிகளைப் பின்பற்றினால் இருதய நோய்கள் வருவதைத் தடுக்க முடியும்.

இருதய நோய்களைத் தடுக்கச் செயற்படுங்கள் புகைபிடிக்காதீர்கள். தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள். ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுங்கள். இப்படி சில நல்வழிகளைப் பின்பற்றுவதால் எதிர்காலத்தில் வரக்கூடிய இருதய நோய்களைத் தடுக்கலாம். இங்கே இருதய நோய்களைத் தடுக்கும் ஐந்து வழிகள் கூறப்பட்டிருக்கின்றன. பின்பற்றுங்கள். புகை பிடித்தல் மற்றும் புகையிலை பொருட்களைத் தவிர்க்கவும் இருதய நோய்த் தடுப்பு என்ற நிலைக்கு வரும்போது சிறிதளவு புகை பிடித்தலும்கூட பாதுகாப்பானது அல்ல. புகைவிடாத புகையிலை, குறைந்த டார், நிகோடின் சிகரெட் என எதுவும் பாதுகாப்பானது அல்ல. மேலும் புகை பிடிப்பவர் பக்கத்தில் இருப்பதாலும் இவை பாதிப்புகளை ஏற்படுத்தும். சிகரெட் புகையிலையில் ஏறக்குறைய 4800 வேதிப்பொருட்கள் இருக்கின்றன. இதில் பெரும்பாலானவை உங்கள் இருதயத்திற்கும், இரத்தக் குழாய்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துபவை. இவை இரத்தக் குழாய்களை இறுக்கி விடுகின்றன. (அத்தி ரோஸ்கெலிரோசிஸ்) இதனால் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு வரும். இதுதவிர நிகோடின் இரத்தக் குழாய்களை குறுக்குவதால் இருதயத்தை அதிக வேலை செய்ய வைக்கிறது. இருதயத்துடிப்பு அதிகரிக்கிறது. இரத்த அழுத்தம் உயர்கிறது. சிகரெட் புகையில் இருக்கிற கார்பன்மோனாக்சைட் இரத்தத்தில் இருக்கிற ஒக்ஸிஜனை வெளியேற்றிவிடுகிறது. இதனால் தேவையான ஒக்ஸிஜனைப் பெற இருதயம் அதிக வேலை செய்ய வேண்டி வருகிறது.தவிர பார்களில் அல்லது நண்பர்களுடன் இருக்கும் போது மட்டும் புகைபிடிப்பது கூட பாதுகாப்பற்றது. இவையும் இருதய நோய்களை உருவாக்கக்கூடிய அபாயம் உண்டு.

புகைபிடிக்கும் பெண்கள் மற்றும் கருத்தடை மாத்திரை பயன்படுத்துபவர்கள் இருதயம் பாதிக்கப்படும் அபாயத்தில் இருக்கிறார்கள். இவர்களுக்கு மாரடைப்பு, மூளைவாதம் இரண்டும் மற்ற சாதாரண பெண்களுக்கான அபாயத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது. இந்த அபாயம் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்னும் அதிகமாகிறது. இதில் நல்ல செய்தி என்னவென்றால், புகைபிடிப்பதை நிறுத்திவிட்டால் இருதயம் பாதிக்கிற அளவு ஒரு வருடத்தில் நம்ப முடியாத அளவிற்குக் குறைந்துவிடுகிறது. எவ்வளவு சிகரெட் பிடித்தீர்கள் என்பதைப் பற்றிய கவலையில்லை. நிறுத்தியவுடன் அதற்கான பலன் கிடைக்கத் தொடங்கி விடும். சுறுசுறுப்பாக இருங்கள்: உடல் உழைப்பு நல்லது என்பதை நீங்கள் ஏற்கெனவே அறிவீர்கள். ஆனால் எவ்வளவு நல்லது என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்.

மிதமான வேகம் கொண்ட உடல் உழைப்பில் தொடர்ந்து ஈடுபடுவதால் மோசமான இருதய நோய்கள் வரும் வாய்ப்பு கால் பங்கு குறைக்கப்படும். அதே நேரத்தில் உடல் உழைப்புடன், எடை சரியாக இருப்பது. நல்ல உணவு உண்பது போன்ற வாழ்க்கை முறைகளும் இருந்தால் இருதயத்திற்குக் கிடைக்கும் பலன்கள் அபரிமிதமானது. தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதால் இருதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் அதிகரித்து, இருதயத்தின் சுருங்கி விரியும் திறன் கூடுகிறது. இதனால் இருதயம் சுலபமாக, நிறைய இரத்தத்தை வெளியேற்றும் சக்தி பெறுகிறது. உடற்பயிற்சியால் உங்கள் எடை அதிகரிப்பதும் தடுக்கப்படுகிறது. தவிர இருதயத்தை பாதிக்கும் மற்ற அபாயங்களான உயர் இரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரோல் அளவு மற்றும் நீரிழிவு நோயும் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிழும். மேலும் மன அழுத்தமும் குறையும். இதுவும் இருதயப் பிரச்சினைகளுக்கு ஒரு காரணம். ஒரு வாரத்தில் அதிக நாட்களுக்கு குறைந்தது 30, 60 நிமிடமாவது மிதவேக உடற்பயிற்சி செய்யுங்கள் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். மேற்சொன்ன அளவில் உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்றாலும் உங்கள் முயற்சியை விட்டுவிட வேண்டாம். குறைந்த அளவு பயிற்சியும் இருதயத்திற்குப் பலனளிக்கிறது.

தோட்டவேலை, வீட்டுவேலை, மாடிப்படி ஏறுவது, நாயுடன் நடப்பது என எல்லாமே மொத்த அளவில் சேரும் என்பதை நினைவில் வையுங்கள். கடினமாக உடற்பயிற்சி செய்தால் தான் நல்ல பலன் என்று இல்லை. பயிற்சியின் அளவை அதிகரிப்பது, நேரத்தைக் கூட்டுவது போன்றவை கூட பெரிய பலன்களைத் தரும்.

உங்கள் எடையைக் கவனிப்பது என்பது உங்கள் இருதயத்தைக் கவனிக்கிற ஒரு நல்ல வழி என்பதை மறக்காதீர்கள்.

இருதயத்திற்கு ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுங்கள்:

தொடர்ந்து பழங்கள், காய்கறிகள், முழுதானிய வகைகள் மற்றும் குறைந்த கொழுப்புப் பொருட்களைச் சாப்பிடுவதன் மூலம் இருதயத்தைப் பாதுகாக்க முடியும். குறைந்த கொழுப்பு உள்ள புரத வகை உணவுகள் கூட இருதய பாதிப்புகளைக் குறைக்கின்றன. சிலவகை கொழுப்புகளை உட்கொள்வதைக் கட்டுப்படுத்துவது கூட முக்கியம். இதில் சாச்சுரேடட், பாலிஅன் சாச்சுரேடட், மோனோ அன்சாச்சுரேடட் மற்றும் ட்ரான்ஸ் /பேட் போன்றவை இருதயம் சார்ந்த இரத்தக் குழாய்களில் கொலஸ்டிரால் அளவை உயர்த்துவதன் மூலம் பாதிக்கின்றன. சாச்சுரேடட் வகை கொழுப்பு அதிகமாக இருப்பவை. வெண்ணெய், பாலாடைக்கட்டி, தேங்காய், பால் மற்றும் பனை எண்ணெய். இதில் டிரான்ஸ்பேட் வகை கொழுப்பு மிக மோசமானது என்பதற்கு ஆதாரங்கள் பெருகி வருகின்றன. காரணம் இது கெட்ட கொலஸ்டிராலை உயர்த்தி, நல்ல வகை கொலஸ்டிராலை குறைத்து விடுகிறது.

நன்கு வறுக்கப்பட்ட உணவுகள், பேக்கரி பொருட்கள், ஸ்நாக்ஸ் வகைகள் மற்றும் கொறிக்கப்படும் உணவு வகைகளில் டிரான்ஸ்/பேட் அதிகமாக உள்ளது. இருதயத்திற்கு ஆரோக்கியமான உணவு என்பது எல்லாவற்றையும் நிறுத்திவிடுவது அல்ல. பலருக்கு அவர்கள் உணவோடு பழங்களையும், காய்கறிகளையும் அதிகமாக சேர்க்க வேண்டி இருக்கும்.

பாலிஅன்சாச்சுரேட் வகை கொழுப்பில் வருகிற ஒமேகா 3 என்கிற கொழுப்பு அமிலம் உங்கள் இருதயத்திற்குப் பாதுகாப்பானது. இது மாரடைப்பைத் தடுக்க உதவும். ஒழுங்கற்ற இருதயத் துடிப்பை சரிசெய்ய உதவும். இரத்த அழுத்த அளவை சமநிலைப்படுத்தும். ஒமேகா 3 இயற்கையாக மீன்களில் அதிகம் கிடைக்கிறது.

ஆரோக்கியமான உணவைப் பின்பற்றுவது என்பதில் மிதமாக குடிப்பதும் வந்துவிடுகிறது. ஆண்கள் ஒரு நாளைக்கு இரண்டு அளவும் பெண்கள் ஒரு அளவும் ஆல்கஹால் பருகுவது உங்கள் இதயத்தைப் பாதுகாக்கும் திறன் கொண்டது. அதிகமானால் ஆரோக்கியக்கேடு. இதனால் குடிப்பதை இருதயப் பாதுகாப்புக்கு தொடங்கக் கூடாது. ஏற்கெனவே குடிப்பழக்கத்தில் சிக்கியிருக்கிறவர்கள் இருதயத்தைப் பாதுகாக்கத்தான் இந்த வழி.

சரியான உடல் எடையைப் பராமரிப்பது

தொடர்ந்து உடற்பயிற்சியும், சரியான உடல் எடையில் இருப்பதும் நீண்ட நாளுக்கு இருதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் வழி. நடுத்தர வயதில் இருக்கும் போது எடை போடுவது என்பது உடலின் கொழுப்புத் திசுக்கள் சேருவதைக் குறிக்கிறது. இந்த அதிக எடை இருதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரோல் அளவு மற்றும் நீரிழிவு நோய் போன்றவை உருவாக வாய்ப்பு அளிக்கிறது. உங்கள் எடை ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? ஆஙஐ என்கிற உயரம் மற்றும் எடையைக் கணக்கிடும் அலகின் மூலம் இதனை அறிந்து கொள்ள முடியும்.

இந்த ஆஙஐ 25 மற்றும் அதற்கு மேல் இருப்பது அதிக இரத்தக் கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், மூளைவாதம் போன்றவை இருதய நோய்கள் வருவதற்கான அதிக வாய்ப்பு. இந்த ஆஙஐ அளவு ஒரு நல்ல ஆனால் முழுமையற்ற கணக்கீடு. காரணம் நல்ல சதைத் திரட்சியும், மிக ஆரோக்கியமாகவும் இருக்கிற ஆண், பெண்கள் அதிக ஆஙஐ அளவில் இருக்கலாம். இவர்களுக்கு எந்த இருதய பாதிப்பிற்கான அபாயங்களும் இருக்காது. காரணம் கொழுப்பை விட தசையின் எடை அதிகம். இதனால் இடுப்புச் சுற்றளவு வயிற்றுக் கொழுப்பை அளவிட பயன்படுத்தப்படுகிறது. இதுவும் ஒரு பயனுள்ள வழி. பொதுவாக ஆண்களுக்கு இடுப்புச்சுற்றளவு 40 இன்ச் அளவை விட அதிகம் இருந்தால் அதிக எடையில் இருப்பதாக கணக்கிடப்படுகிறது.

பெண்களுக்கு இடுப்புச் சுற்றளவு 35 இன்ச் தாண்டும்போது அதிக எடையில் இருப்பதாகக் கணக்கிடப்படுகிறது. இது பொது விதி. குறைந்த அளவு எடை குறைப்பது கூட பயன் தருகிறது. 10 சதவிகிதம் உங்கள் எடை குறைத்தால் இரத்த அழுத்தம் குறைகிறது. அதுவே இரத்த கொலஸ்டிரால் அளவைக் குறைக்கிறது. நீரிழிவு நோய் வரும் வாய்ப்பைக் குறைக்கிறது.

5. தொடர்ந்து உடல்நலப்பரிசோதனை செய்து கொள்வது:

உயர் இரத்த அழுத்தம், உயர் கொலஸ்டிரால் அளவு, நீரிழிவு நோய் மூன்றும் அமைதியாக அழிவு கொடுப்பவை. இருதயம் உட்பட முழு இருதயம் சார்ந்த அமைப்பு மண்டலத்தை இவை பாதிக்கக்கூடும். ஆனால் பரிசோதனை செய்யாமல் இந்த நோய் இருப்பதை அறிய முடியாது. தொடர்ந்து பரிசோதனை செய்து கொள்வது மட்டுமே இவை எந்த அளவில் இருக்கின்றன என்பதையும், சிகிச்சைகள் தேவையா என்பதையும் சொல்லும்.

இரத்த அழுத்தம் : தொடர்ந்த இரத்த அழுத்த கவனிப்பை சிறுவயதிலிருந்தே தொடங்க வேண்டும். வயது வந்தவர்கள் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை பரிசோதிக்க வேண்டும். அளவு சரியாக இல்லை என்றால் அடிக்கடி பரிசோதிக்க வேண்டியிருக்கும். அல்லது இருதய பாதிப்பு வரக்கூடிய காரணங்களோடு இருக்கிறவர்கள் அடிக்கடி பரிசோதிக்க வேண்டியிருக்கும். சரியான இரத்த அழுத்த அளவு 120/80. இது வயது வந்தவர்களுக்கு, வயது அதிகரிக்க, அதிகரிக்க அதிக இரத்த அழுத்தம் இருக்கும் என்பது தவறானது.

கொலஸ்டிரால் அளவு : வயது வந்தவர்கள் குறைந்தது, ஐந்து வருடத்திற்கு ஒரு முறையாவது கொலஸ்டிரால் அளவைப் பரிசோதிக்க வேண்டும். அளவு சரியாக இல்லை என்றால் அடிக்கடி பரிசோதிக்க வேண்டி வரும். மரபு வழியில் தீவிரமாக இருதயப்பாதிப்புகள் வரக்கூடிய நிலையில் இருக்கும் சில குழந்தைகள் இந்தப் பரிசோதனை தேவைப்படும் நிலையில் இருப்பார்கள். ழூ நீரிழிவு நோய் : நீரிழிவு நோய் தொடர்பான மரணங்களுக்கு இருதய நோய்கள்தான் முக்கியக் காரணமாக இருக்கின்றன. காரணம் அதிக சர்க்கரை அளவு இரத்தக்குழாய்களின் இறுக்கத்திற்குத் தொடர்பு உடையது. கூடவே அதிக டிரை கிளிசரைடு, குறைந்த அளவு நல்ல கொலஸ்ட்ரோல், உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு என பலவற்றோடு தொடர்பு உடையது. வயது வந்தவர்களிடம் ஏற்படும் இருதய நோய் தொடர்பான மரணம் நீரிழிவு நோய் இருக்கிறவர்களுக்கு, இல்லாதவர்களைவிட 2 முதல் 4 மடங்கு வரை அதிகமாக இருக்கிறது.

ஆரோக்கியமான இருதயத்திற்கு பத்து எளிய வழிகள்

1. உடற்பயிற்சி.

2. நிறைய தண்ணீர் குடிப்பது.

3. காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது.

4. ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுவது.

5. கொலஸ்டிரால் அளவை கவனித்துக் கொள்வது.

6. உப்பின் அளவைக் குறைப்பது.

7. புகைபிடிப்பதை நிறுத்துவது.

8. சரியான எடையில் இருப்பது.

9. இயல்பற்ற உடல் எச்சரிக்கை குறிப்புகளை புறக்கணிக்காதிருப்பது.

10. தொடர்ந்து இருதயத்தைப் பரிசோதிப்பது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல