ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

கர்ப்பகாலத்தில் உயர் இரத்த அழுத்தமா?

மனித வாழ்க்கையில் எப்போதுமே சாதாரண இரத்த அழுத்தம்தான், அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கான முக்கிய காரணி அதே போல கர்ப்பமாக இருக்கும் போது கூட, இரத்த அழுத்தம் சாதாரணமாக இருந்தால்தான் தாயின் ஆரோக்கிய மும், அவள் வயிற்றில் இருக்கும் குழந்தை யின் வளர்ச்சியும் நல்ல நிலையில் இருக்கும்.

கர்ப்பமாவதற்கு முன்னாடியே கிட்டத்தட்ட 5 சதவீத பெண்களுக்கு ஹைப்பர் டென்ஷன் இருக்கிறது. இது க்ரானிக் ஹைப்பர் டென்ஷன் அல்லது எஸன்ஷியல் ஹைப்பர் டென்ஷன் என்றும் அழைக்கப்படுகிறது. 5லிருந்து 8 சதவீத பெண்களுக்கு, அவர்கள் கர்ப்பமாக இருக்கும் போது ஹைப்பர் டென்ஷன் ஏற்படுகிறது. இது கெஸ்டேஷனல் ஹைப்பர் டென்ஷன் அல்லது கர்ப்பத்தினால் வரும் ஹைப்பர் டென்ஷன் என்று அழைக்கப்படு கிறது. இதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வில்லை என்றால் கர்ப்பத்தின் போது தாய்க்கும், சேய்க்கும் சீரியஸான பிரச்சினை கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் இரத்த அழுத்தத்தை கணக்கிடுதல் இரத்த அழுத்தம் கணக்கீடு இரண்டு எண்களாக, ஒரு சாய்வுக் கோடால் (/) பிரிக்கப் பட்டுள்ளது. உதாரணமாக சொல்வதென்றால் 110/80. முதலில் இருக்கும் எண் இதயம் சுருங்கும் போது இரத்தக் குழாய்களில் ஏற்படும் அழுத்தத்தின் அளவைக் குறிப்பிடு கிறது. இதை சிஸ்டோலிக் பிரஷர் என்று அழைப் போம். இரண்டாவதாக இருக்கும் எண், இதயம் விரியும்போது இரத்தக் குழாய் களில் ஏற்படும் அழுத்தத்தின் அளவைக் குறிப்பிடுகிறது. இது டயஸ்டோலிக் பிரஷர்.

கர்ப்பமாக இருக்கும்போது சாதாரணமாக பெண்களுக்கு, அவர்களுடைய இ ரத்த அழுத்தம் 120/80 அல்லது அதை விட குறைவாக இருக்கும். நீங்கள் கர்ப்பமாக இருந்து, இரத்த அழுத்தம் டெஸ்ட் செய்து கொள்ளும் போது உங்கள் சிஸ்டோலிக் பிரஷரின் அளவு 140 அல்லது டயஸ்டோலிக் பிரஷரின் அளவு 90ஆக இரண்டு தடவைக்கு மேல் இருந்தால் உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறது என்று அர்த்தம். ஹைப்பர் டென்ஷனால் உங்கள் கர்ப்பம் எப்படி பாதிக்கப்படுகிறது?

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது எப்போது உயர் இரத்த அழுத்தம் ஏற்படு கிறதோ, அப்போது நெஞ்சில் இரத்த ஓட்டம் பாதிக்கப் படும். இதனால் கருவின் சரியான வளர்ச்சி தடைப்பட்டு, குழந்தையின் எடை குறைச்சலாகப் பிறக்கும். இந்தப் பிரச்சினை, கருத்தரித்து 32 வாரங்களுக்கு முன்பே ஹைப்பர் டென்ஷ னால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கோ அல்லது கட்டுப்படுத்த முடியாத க்ரோனிக் ஹைப்பர் டென்ஷனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கோ அதிகமாக ஏற்படுவதைப் பார்க்க முடியும். மேலும், ஹைப்பர் டென்ஷனால் டாக்டர் குறிப்பிட்ட பிரசவ திகதிக்கு முன்பே கூட (கருத்தரித்து 37 வாரங்களுக்கு முன்னால்) பிரசவம் ஆகி விடலாம். இதனால் குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகளும், எடை குறைவாக பிறந்த குழந்தைகளும் பிறந்த புதிதில் நிறைய உடல் நலக்குறைவுகளை சந்திக்க நேரிடும். தவிர, சரி செய்ய முடியாத கற்றல் குறைபாடு மற்றும் மூளை வளர்ச்சி யின்மை போன்ற ஊனங்களுடன் பிறக்கலாம். கர்ப்பத்தின் போது வரும்

உயர் இரத்த அழுத்தத்தின் வகைகள்

1. க்ரோனிக் ஹைப்பர்டென்ஷன்

உயர் இரத்த அழுத்தமான க்ரோனிக் ஹைப்பர் டென்ஷன் சில நேரங்களில் கருத்தரிப்பதற்கு முன்னாடியோ அல்லது கருத் தரித்து 20 வாரங்களுக்குள் பரிசோதனையில் தெரியலாம். இந்த வகை ஹைப்பர் டென்ஷன் பிரசவத்துக்குப் பிறகும் கூட நீடிக்கும். கர்ப்ப மாக இருக்கும் போது இந்த ஹைப்பர் டென்ஷனால் கருவின் வளர்ச்சி பாதிக்கப் படலாம். ஒரு சில பெண்களுக்கு இந்த டைப் பிளட் பிரஷரை கன்ட்ரோல் செய்ய அந்தப் பெண் அதுவரை எடுத்து வந்த மாத்திரை களினால் கருவில் இருக்கும் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருக்க வேறு மாத்திரைகள் மாற்ற வேண்டி இருக்கும். க்ரோனிக் ஹைப்பர் டென்ஷனால் பாதிக்கப் பட்டிருக்கும் 25 சதவீத பெண்களுக்கு ப்ரீக்லாம்ப்சியா இருக்கலாம். இது கர்ப்பத்தின் போது வரும் ஒரு விதமான அதிக இரத்த அழுத்தம். இதில் பிரச்சினைகள் அதிகம்.

2. கெஸ்ட்டேஷன் ஹைப்பர் டென்ஷன் அல்லது கருத்தரிப் பினால் ஏற்படும் ஹைப்பர் டென்ஷன்

ஒரு பெண் கருத்தரித்து 20 வாரங்கள் கழித்து, அவருக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பது முதல் தடவையாக கண்டுபிடிக்கப் பட்டால், அது கெஸ்ட்டேஷனல் ஹைப்பர் டென்ஷன்! இந்த வகை இரத்த அழுத்தம் பொதுவாக குழந்தை பிறந்ததும் சரியாகி விடும்.

3.ப்ரீக்லாம்ப்சியா

எப்போது கெஸ்ட்டேஷனல் ஹைப்பர் டென்ஷனுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளில் ஒன்றோ அல்லது அதற்கு மேலோ இருக்கிறதோ, அந்த நிலை ஹப்ரீக்லாம்ப்சியா' என்றழைக் கப்படும்.

சிறுநீரில் புரதம் (அல்புமின்) வெளியேறுதல் தொடர்ச்சியான தலைவலி. பார்வைக் குறை பாடு. உதாரண மாக பார்வை தெளிவின்மை, பொருட்களெல்லாம் இரட்டையாகத் தெரிதல். தொடர்ச்சியான எடை அதிகரித் தல். முகம் மற்றும் கைகளில் வீக்கம் ஏற்படுதல். வலது பக்க மேல் வயிற்றில் வலி ஏற்படுதல்.

4. க்லாம்ப்சியா

எப்போது ப்ரீக்லாம்ப்சியா சிவியராகிறதோ அப்போது பாதிக்கப்பட்டவருக்கு வலிப்பு ஏற்படும். இது தான் க்லாம்ப்சியா. இந்த நிலை கர்ப்பமாக இருக்கும் தாய்க்கும், கருவில் இருக்கும் குழந்தைக்கும் மிகவும் ஆபத்தான நிலையாகும். இது போன்ற ஆபத்தான நிலையில் வழமையாக செக்கப் செய்து கொள் ளும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஹக்லாம்ப் சியா' ஏற்படுவது மிகமிக அரிது.

சிகிச்சை

உடல் உழைப்பைக் குறைத்துக் கொள்ளுதல் மற்றும் இரத்த அழுத்ததுக்கான மருந்துகளை எடுத்துக் கொண்டால், குழந்தை முழு வளர்ச்சியடைந்து பிரசவமாகும் வரைக்கும் பிளட் பிரஷரை கன்ட்ரோல் செய்ய வாய்ப்பு கள் அதிகம்.

கர்ப்பத்தில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தத் திற்கு உப்புக் குறைத்த உணவு தேவையில்லை. ஆனால் க்ரானிக் ஹைப்பர் டென்ஷன் உள்ளவர்களுக்கு உப்புக் குறைத்த உணவு அவசியம். ப்ரீக்லாம்ப்சியாவை பொறுத்தவரை, நிறைய கேஸ்களில் டெலிவரியாவதுதான் தீர்வே. எப்போது டெலிவரி செய்ய வேண்டும் என்பது கர்ப்பத்தின் வாரங்கள் மற்றும் அவர் களின் நிலைமையைப் பொறுத்து தீர்மானிக் கப்பட வேண்டும்.

பிரசவ சமயத்தில் கருத்தரித்த பெண் களின் நிலைமை நல்லபடியாக இருந்தால் வலியை வரவழைத்து சாதாரண பிரசவம் டெலிவரி செய்தல். அதுவே, மேலே சொன்ன ஏதோ ஒரு பிரச்சினை அந்த கர்ப்பமான பெண்ணுக்கு இருந்தால் அல்லது பிரசவ வலி வரும் வரை குழந்தையால் சமாளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டால் அவர்களுக்கு சிசேரியன் செய்ய டாக்டர் முடிவெடுப்பார்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல