வழமையாக பயன்படுத்தப்படும் மருந்து உறையில் சிறிய நுண் “சிப்' (Chip) அலகையும் சமிபாடடையக் கூடிய உணர்கொம்பையும் இணைத்தே இந்த மருந்து உறையை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
இந்த மருந்து உறையிலுள்ள உணர் கொம்பு ஜீரணமாகும் நிலையில், அது தன்னிச்சையாக மேற்படி மருந்து உட் கொள்ளப்பட்டமை குறித்து மருத்துவர்களுக்கோ பராமரிப்பாளர்களுக்கோ சமிக் ஞைகளை அனுப்பும்.
இந்த புதிய கண்டுபிடிப்பானது நோயாளிகள், நேரத்துக்கு மருந்தை எடுக்கிறார்களா என்பதை கண்காணிப்பதற்கு மிகவும் உறுதுணையாக அமையும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
உரிய நேரத்துக்கு மருந்துகளை உள்ளெடுக்காமையே உயிராபத்து மிக்க நோய்களால் பாதிக்கப் பட்ட நோயாளிகள் மரணமடைவதற்கு அநேக சந்தர்ப்பங்களில் காரணியாக அமைந்துவிடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அமெரிக்க இருதய சங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடானது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளில் 10 சதவீதமானவர்கள், தமக்கு வழங் கப்பட்டுள்ள மருந்துகளை முறைப்படி உப யோகிக்கத்தவறியதன் காரணமாக நோய் தீவிரமடைந்தவர்கள் என தெரிவிக்கிறது.
மருந்துகளை சரியான முறையில் உள்ளெடுக்காமையால் வருடாந்தம் 2,18,000 மரணங்கள் ஏற்படுவதாக கணிப்பிடப்பட்டுள்ளது.
நோயாளி மேற்படி மருந்து உறையை விழுங்கும் போது அதிலுள்ள நச்சுத் தன்மை யற்ற உணர்கொம்புகள் நோயாளியால் அணியப்பட்ட சிறிய இலத்திரனியல் உபகரணத்துக்கு சமிக்ஞைகளை அனுப்பும். இந் நிலையில், மருந்து உறையிலுள்ள கொழுப்பு ஜீரணமாகும் சமயத்தில் இந்த உபகரணம் மருத்துவர்களதோ அன்றி குடும்ப அங்கத்தவர்களதோ கையடக்கத் தொலை பேசி அல்லது “லப்டொப்' கணினி என்பனவற்றுக்கு சமிக்ஞைகளை அனுப்பும்.
சமிக்ஞை எதுவும் பெறப்படாத நிலையில் நோயாளி மேற்படி மருந்தை உள்ளெடுக்கவில்லை என்பதை மருத்துவர்களும் உறவினர்களும் அறிந்து கொள்ளமுடியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக