ஒரு வருட காலமாக புற்று நோயுடன் போராடி வந்த அவர், நிமோனியா காய்ச்சல் காரணமாக கலிபோர்னியா மாநிலத்தில் சான்தாயனெஸ் எனும் இடத்தில் மரணமானார்.
1981 1989 ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஒளிபரப்பான “டைனாஸ்ரி“ தொடரில் பிரித்தானிய பிரபல நடிகை ஜோன் கொலின்ஸுடன் இணைந்து அவர் நடித்திருந்தார்.
அவர் அத்தொடரில் பிளேக் காரிங்டன் என்ற கோடீஸ்வர பிரமுகர் வேடத்தில் நடித்திருந்தார்.
மேற்படி தொடரில் நடித்தமைக்காக அவர் சிறந்த நடிகருக்கான “கோல்டன் குளோப்' விருதை இரு தடவைகள் வென்றதுடன் “எம்மி' விருதுக்கு மூன்று தடவைகள் சிபாரிசு செய்யப்பட்டார்.
அவர் 1976 1981 ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஒளிபரப்பப் பட்ட “சார்ளிஸ் ஏஞ்சல்ஸ்' தொலைக்காட்சித் தொடரில், தனது உருவத்தை ஒருபோதும் காண்பிக்காமல் தொலைபேசி மூலம் கட்டளைகளை பிறப்பிக்கும் “சார்ளி' என்ற பிரதான கதாபாத்திரத்துக்கு குரல் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக