இப்படி ஒரு புதுமையான விற்பனை திட்டம் அமெரிக்காவில் துவங்கப்பட்டுள்ளது. சீனாவை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர் பான் பி (21). தற்போது, அமெரிக்காவில் வசிக்கிறார்.
"பிளாங்க் லேபிள்' என்ற பெயரில் ஆண்களுக்கான சட்டைகளை தயாரிக்கும் தொழில் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி. புதுமையான விஷயங்களை செய்வதில் ஆர்வம் உடையவர், இவர். வாடிக்கையாளர்கள் கடைகளுக்கு வந்து, அங்கு இருக்கும் சட்டைகளில் தங்களுக்கு ஏற்ற சட்டையை வாங்கிக் கொள்ளும் முறையில் மாற்றம் செய்து, சில புதுமைகளை புகுத்தினால், தொழில், "ஓஹோ'வென நடக்கும் என, பான் பி கருதினார்.
நண்பர்கள் சிலருடன் சேர்ந்து உடனடியாக களத்தில் இறங்கினார். இவர்களின் திட்டப்படி, வாடிக்கையாளர்கள், தாங்கள் எந்த நிறத்தில், எந்த டிசைனில், எந்த அளவில் சட்டை இருக்க வேண்டும் என்பதை வடிவமைத்து, அதை ஆன்-லைன் மூலமாக, பிளாங்க் பி நிறுவனத்துக்கு தெரிவித்தால் போதும். நான்கு வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களின் வீடு தேடி, அவர்கள் விரும்பிய சட்டை வந்து விடும்.
பான் பியின் இந்த புதுமைக்கு, அமெரிக்காவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து பான் பி கூறியதாவது: நாங்கள் எதிர்பார்க்காத அளவுக்கு இந்த திட்டத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்காக சீனாவின் ஷாங்காய் நகரில் சட்டைகளை தைப்பதற்கான டெய்லரிங் ஷாப்களை திறந்துள்ளோம்.
ஆன்-லைன் மூலமாகவே தொழில் நடப்பதால், கடை, விற்பனையாளர்கள் போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வாடிக்கையாளர்களும் கடைகளில் ஏறி, இறங்க வேண்டிய அவசியம் இல்லை. கடைகளுக்கு சென்று, அங்குள்ள சட்டைகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்வதை விட, தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப, தாங்களே வடிவமைத்த சட்டைகளை பெற முடியும். மேலும், சட்டை வடிவமைப்பில் தாங்களும் பங்கேற்ற திருப்தியும் வாடிக்கையாளர்களுக்கு இதில் உள்ளது. இவ்வாறு பான் பி கூறினார்.
http://www.blank-label.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக