பிரித்தானிய கொலம்பிய கடலை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று சந்தேகிக்கப்படும் எம்.பி சன்.சீ என்கிற இக்கப்பலை அவ்வதிகாரிகள் மிகவும் நெருக்கமான முறையில் கண்காணித்து வருகின்றார்கள்.
இக்கப்பல் ஆஸ்திரேலியாவை சென்றடைய இருந்த நிலையில் அம்முயற்சியை விட்டு விட்டு கனடாவை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என ஊகங்கள் வெளியாகி உள்ளன.
உண்மையான அகதிகளுக்கு கனடாவில் வழங்கப்படுகின்ற அரசியல் தஞ்சத்தை துஷ்பிரயோகம் செய்கின்றமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இம்முறை இதற்கு முடிவு கட்டப்படும் என்றும் கனேடிய குடிவரவு அமைச்சர் கறுவி உள்ளார்.
இக்கப்பலில் வருகின்ற சடவிரோத பயணிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கனேடிய வெளிவிவகார அமைச்சு அமைச்சு அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக