சமீபத்தில் பிரான்சில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகத்தை மூடும் படியான ஆடைகளை அணிய தடை விதிப்பதற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் மூலம் அந்த நாட்டில் இஸ்லாமிய ஆடையான புர்கா அணிவது சட்டத்திற்கு புறம்பானதாக மாறக் கூடும். இதன் பின்னரே இந்த கருத்து கணிப்பு பிரித்தானியாவிலும் நடத்தப்பட்டுள்ளது.
இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இருந்து ஐரோப்பிய நாடான பெல்ஜியம் பொது இடங்களில் புர்கா அணிய தடை விதித்துள்ளது. இதுவே இந்த தடையை அமலுக்கு கொண்டு வந்துள்ள முதல் நாடு. இது போன்ற தடைகள் மக்கள் சுதந்திரமாக தங்கள் கருத்துக்களை சொல்வதையும், சமயக் கோட்பாட்டு உரிமைகளையும் பறிப்பதாக அமையும் என சர்வதேச பொது மன்னிப்பு சபை என்ற மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.
பிரான்ஸ் அதிபர் உட்பட இதற்கு ஆதரவளிக்கும் பலரும் இது பெண்களின் கௌரவத்தை குறைப்பதாக உள்ளது என்றும் மேலும் பல இஸ்லாமிய பெண்களுக்கு இதை அணிய விருப்பம் இல்லாமல் வேறு வழியின்றியே அணிவதாகவும் கூறியுள்ளனர். கிட்டத்தட்ட 71 சதவீத பிரித்தானிய முஸ்லிம்களும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக