ஆனால் இன்று நியூசிலாந்தில் உள்ள உயிர் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் புரட்சிகர கண்டுபிடிப்பின் மூலம் இவரால் நடக்க முடிகிறது. ரெக்ஸ் அல்லது ரொபோட்டிக் கால் (REX or Robotic Legs) என அழைக்கப்படுகிறது இந்த ரோபோ கால்கள். நடக்க முடியாமல் சக்கர நாற்காலி வண்டிகளை பயன்படுத்தி வருபவர்கள் இதை பொருத்திக் கொண்டு நடக்கலாம்.
உலகிலேயே முதன்முறையாக ரோபோ கால்களை பயன்படுத்தக் கூடிய சிலரில் தற்போது அலேனும் ஒருவர். இந்த கால்களை பயன்படுத்தி நிற்கலாம், நடக்கலாம், மேலும் கீழும் ஏறலாம் இறங்கலாம். ஐந்து வருடங்களாக நடக்க முடியாமலிருந்து விட்டதால் ரெக்ஸை பயன்படுத்தி தன பாதங்கள் நடப்பதை தன்னால் தற்போது நம்ப முடியவில்லை என்றும் ஆச்சர்யமாக இருப்பதாகவும் கூறுகிறார் அலேன்.
மேலும் தான் நடக்கும் போது மேலே பார்த்து நடக்குமாறும் கேழே குனிந்து கொண்டே வரவேண்டாம் என அனைவரும் கூறும் போது கூட தன கண்கள் பாதங்கள் மீண்டும் நடப்பதையே கவனிப்பதாகவும பிரமிப்புடன் கூறுகிறார் அலேன். புதிதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்த ரெக்ஸின் இயக்கம் ஜாய் ஸ்டிக் மூலம் கட்டுப்படுத்தப்படும்படி வடிவமைக்கப்பட்டுளளது.
ரெக்ஸ் எனப்படும் இந்த கால்கள் 38 கிலோ எடை கொண்டவை. ஒவ்வொருவருக்கும் தனித்தனியே அவர்கள் உயரம், அமைப்பு ஆகியவற்றிற்கு ஏற்றவாறு வடிவமைத்துக் கொடுக்கப்படுகிறது. குறைவான எடை கொண்ட நீடித்து உழைக்கக் கூடிய மீண்டும் பயன்படுத்தக்கூடிய பாட்டரிகளின் மூலம் ரெக்ஸ் உயிரூட்டப்படுகிறது.
மெக்கானிக்காக பணிபுரிந்த அலேன் முன்பு போல் தன்னால் பணியிடத்திற்கு செல்ல முடிவதாகவும், வாடிக்கையாளர்களையும், பணியாளர்களையும் நேராக சந்தித்து பேச முடிவதால் தொழில் தொடர்பான அனைத்தும் மீண்டும் தன கண் பார்வையிலேயே நடக்கும் திருப்தி தனக்கு ஏற்ப்பட்டிருப்பதையும் கூறி பெருமிதமடைகிறார். அலேனைப் போல் விபத்தால் நடக்க முடியாமல் இருக்கும் பலருக்கும் இது ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என நிரம்பியல் நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக