ஒருநாள் அவர்களில் ஒருவர் நூலகத்துக்குச் சென்றான். அங்கு ஒரு சுவாரசியமான கதை ஒன்றைப் படித்த அவனுக்கு பொறிதட்டியது. அந்தக் கதையில் ஒரு மனிதன் இறக்கைகள் எதுவும் இல்லாமல் காற்றாடி போன்ற ஒன்றின் துணையால் வானில் பறப்பது போல சித்தரிக்ப்பட்டிருந்தது.
அதைப்படித்த உடனே தானும் அவ்வாறு ஏன் பறக்கக்கூடாது? என்ற எண்ணம் ஏற்பட்டது. அதே சிந்தனையுடன் வந்து தனது சகோதரனிடம் அந்த எண்ணத்தைத் தெரிவித்தான். இருவரும் விண்ணில் பறப்பது பற்றி தீவிரமாகச் சிந்தித்து பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர்.
கடுமையான முயற்சிகளுக்கப் பின்னர் வானில் பறக்க ஒரு எந்திரத்தைக் கண்டுபிடித்தனர். அதன் உதவியால் 1903ம் ஆண்டு டிசம்பர் 17 ஆந் திகதி வெற்றிகரமாக வானில் பறந்து சாதனை படைத்தனர். தங்களுடைய விடாமுயற்சியால் விந்தை புரிந்த அவர்கள் தான் ‘ரைட் சகோதரர்கள்’(Wright Brothers9.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக