Ben & Angela Ihegboro with baby Nmachi
வெண்ணிற மேனி , பொன்னிற தலைமுடி மற்றும் நீல நிறக் கண்களுடன் பிரித்தானியாவில் உள்ள Ben and Angela Ihegboro நைஜீரியா தம்பதியினருக்கு பிறந்துள்ள பெண் குழந்தை மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
வேறு எந்தக் குறைபாடும் இருப்பதால் இந்த குழந்தை வெண்ணிறமாக பிறக்கவில்லை எனவும் , அனைத்தும் சரியாகவே இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஒருவேளை தங்கள் மூதாதையர்கள் யாரேனும் வெள்ளை இனத்தை சேர்ந்தவர்களாக இருப்பர்களோ என எண்ணத் தொடங்கியுள்ளனர் இந்த தம்பதியினர்.
parents with newborn Nmachi with other children; Dumebi and Chisom
தங்களுக்கு தெரிந்த வரை அப்படி யாருமில்லை எனவும் கூறி வியக்கின்றனர் குழந்தையின் பெற்றோர்கள். குழந்தையின் பெற்றோர்கள். தற்போது பிறந்துள்ள குழந்தையின் தாய் , தந்தை இருவருமே கருப்பினத்தை சேர்ந்தவர்கள் என்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளது.
அதுவும் கறுப்பின குழந்தைகளே. கடவுள் தந்த அழகிய பரிசாக அந்த குழந்தையை எண்ணும் பெற்றோர்கள் கண்கொட்டாமல் தங்கள் குழந்தையின் அழகை பிறந்ததில் இருந்து பார்த்து ரசித்துக் கொண்டிருப்பதாக் பிரித்தானிய ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக