புதன் கிரகத்தின் புறவெளி மிகவும் லேசாக இருக்கும் இதனால் புதன் கிரகத்தின் புவியீர்ப்பு விசை, பூமியின் ஈர்ப்பு விசையில் பாதி அளவுதான் இருக்கிறது. புதன் கோளின் கட்டமைப்பு மிகவும் விசித்திரமானது அதன் மூன்றில் இரண்டு பகுதி இரும்பாலானது மீதப்பகுதிகளில் மற்ற உலோகங்களாலும் பாறைகளாலும் நிரம்பியுள்ளது.
புதன் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அவ்வளவு ஏன் புதன் கிரகத்தில் காற்று என்பதே இல்லை. அதனால் சூரியக் கதிர்கள் நேராக அதன் பூமியில் விழும். புதன் கிரகத்தின் வெப்ப நிலையில் சொல்ல முடியாத அளவிற்கு ஏற்ற இறக்கம் ஏற்படுகிறது. அதாவது புதனின் ஒரு பக்கத்தில் 482 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை நிலவினால் மறுபக்கத்தில் மைனஸ் 184 டிகிரி செல்சியஸ் தட்பவெப்பம் நிலவும்.
சூரிய மண்டலத்திலேயே மிகவும் வெப்பமான கோள் என்ற பெருமையையும் புதன் கிரகம் பெறுகிறது.
அனைத்து கிரகங்களையும் விட மிக வேகமாக சூரியனைச் சுற்றி வருகிறது புதன் கிரகம்.
புதன் கிரகத்தின் நிலப்பரப்பு மேடு பள்ளங்களும் அதிகமாகக் காணப்படுகின்றன. அதை விட முக்கியமாக மிகப்பெரிய விரிசல்களும் காணப்படுகின்றன. ஒவ்வொரு விரிசல்களும் சாலைகளைப் போல நீண்டு காணப்படுகின்றன. 1970 ஆம் ஆண்டில் புதன் கிரகத்திற்கு மரினர் 10 என்ற செயற்கைக்கோள் சென்று அதன் தன்மை பற்றி ஆராய்ந்தது புகைப்படங்களையும் அனுப்பியது. அதன் அடிப்படையில்தான் புதன் கிரகத்தின் பல்வேறு தன்மைகள் வெளிக்கொணரப்பட்டன.
தற்போது அமெரிக்காவின் நாசா எனப்படும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மெசஞ்சர் எனும் விண்கலத்தை புதனுக்கு அனுப்பியுள்ளது. இது சுமார் ஆறரை ஆண்டுகள் வரை புதன் கிரகத்தில் இருந்து ஆய்வுகள் மேற்கொள்ளும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக