ஹரிஹக்னால் என்ற இந்த சிறுவன், சக சிறுவர்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளான நிலையிலேயே இந்த விபரீத முடிவை நாடியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
மாடி அறைக்குள் நுழைந்து தாளிட்டுக் கொண்ட சிறுவனை 45 நிமிட நேரமாக அழைத்தும் பதில் வராததால் திகைப்படைந்த அவனது தாயாரான ஜோன் வைட், அயல்வீட்டுக்காரரை உதவிக்கு அழைத்துள்ளார்.
ஏணி வைத்து ஏறி மாடி அறைக்குள் எட்டிப் பார்த்த அயல் வீட்டுக்காரர், அறைக்குள் சிறுவன் தூக்கிட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந் துள்ளார்.
மைக் ஹக்னால்
ஹரி ஹக்னாலின் தந்தை ஹரேன், பிரித்தானிய பிரபல பாடகர் மைக் ஹக்னாலின் உறவினராவார்.
தூக்குப் போடுவது எவ்வாறு என்பதை அறியாத பருவத்திலுள்ள சின்னஞ்சிறுவனான ஹரி ஹக்னாலின் இந்த விபரீத முடிவுக்கு எது காரணமாக அமைந்தது என்பதை கண்டறிய பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஹரி ஹக்னால் ஏற்கனவே சிறுவர்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளான நிலையில் தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொள்ள முயன்றதாக அவனது தாயார் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக