கணவருடன் ஜனிஸ் ஒல்ஸான்
உடலை இரண்டாக வெட்டி மீளவும் பொருத்தும் அறுவைச் சிகிச்சைக்கு உட்பட்டு உயிர்வாழும் உலகின் முதலாவது நபர் என்ற பெருமையை கனடாவை சேர்ந்த ஜனிஸ் ஒல்ஸான் என்ற பெண் பெறுகிறார்.ஜனிஸ் ஒல்ஸானுக்கு (31 வயது) ஏற்பட்டுள்ள உயிராபத்தான நோயைக் குணப்படுத்தும் முகமாகவே அவருக்கு இந்த சிக்கல்மிக்க அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவர் கர்ப்பமாக இருந்த சமயம் அவருக்கு கடும் முதுகுவலி ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் கர்ப்பமடைந்ததால் ஏற்பட்ட அறிகுறியாக இருக்கலாம் என நினைத்து அவர் அலட்சியமாக இருந்துள்ளார்.
அவரைப் பசோதித்த ரொரன்டோ மயோ மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் அவருக்கு எலும்பு புற்றுநோய் ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.
எனினும் அவர் கர்ப்பத்தில் இருந்த குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், அவரது நோயைக் கட்டுப்படுத்த கதிர்ப்பு சிகிச்சையை வழங்க முடியாது போனது.
இந்நிலையில் அவரது புற்றுநோய் கட்டியானது அளவுக்கதிகமாக வளர்ச்சியடைந்து இடுப்பு எலும்புப் பகுதியெங்கும் வியாபித்திருந்தது. இந்த இராட்சத புற்றுநோய்க் கட்டியை அவரது உடலை இரண்டாகப் பிளந்து வேறு பிரித்தே அகற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து ஜனிஸ் ஒல்ஸானின் இடுப்பு எலும்பை இரண்டாகப் பிளந்து அவரது உடலை இரண்டாகப் பிரித்து புற்று நோய்க் கட்டியை அகற்றிய மருத்துவர்கள், அவரது உடலை பெரும் சிரமத்தின் மத்தியில் மீளப் பொருத்தினர்.
இதன்போது ஒரு கால் செயற்பட மறுத்துள்ளது.
இந்நிலையில் அவருக்கு ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள செயற்கை இடுப்பு எலும்புக்கு மேலதிகமான செயற்கை காலொன்றும் வழங்கப்பட்டுள்ளது.
உயிராபத்தான புற்றுநோயிலிருந்து விடுதலையாகியுள்ள ஜனிஸ் ஒல்ஸான், தான் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
இத்தகைய உடலை இரண்டாக வெட்டும் செயற்கிரமமானது இதற்கு முன் பரிசோதனை நடவடிக்கைகளுக்காக சடலங்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக