முக்காடு அணியாத நிலையில் பிரித்தானிய “டைம்ஸ்' பத்திரிகை அஷ்தியானியினுடைய என குறிப்பிட்டு புகைப்படமொன்றை பிரசுத்ததையடுத்தே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவரது மகன் சாஜத் கடெர்ஸ்டெஹ் தெவித்தார்.
எனினும் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் திகதி அஷ்தியானியின் வழக்கறிஞரிடமிருந்து பெறப்பட்டு பிரசுக்கப்பட்ட புகைப்படம் அஷ்தியானியுடையது அல்ல. வேறொரு பெண்ணுடையது என “டைம்ஸ்' பத்திகை பின்னர் திருத்தமொன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஈரானிலிருந்து வெளியேறிய அஷ்தியானியின் சட்டத்தரணியான மொஹமட் மொஸ்தாபெயி, அஷ்தியானியின் மகனிடமிருந்தே மேற்படி புகைப்படத்தை பெற்றதாக தெரிவித்தார்.
ஆனால் அதற்கு சாஜத் கடெர்ஸடெஹ் (Sajjad Qaderzadeh) மறுப்பு தெரிவித்துள்ளார். முக்காடு அணியாமல் ஒழுங்கீனமான முறையில் புகைப்படத்துக்கு காட்சியளித்ததாக தனது தாய் மீது சுமத்தப்பட்ட புதிய குற்றச்சாட்டானது எனது தாய்க்கு எதிரான நடவடிக்கைகளை நியாயப்படுத்த அதிகாரிகள் தேடிக் கொண்ட வழியாகும் என அவர் கூறினார்.
தப்ரிஸிலுள்ள சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அஷ்தியானியைச் சந்திப்பதற்கோ அவருடன் தொடர்பு கொள்வதற்கோ அவரது குடும்பத்தவர்களுக்கும் சட்டத்தரணிக்கும் கடந்த இரு வாரங்களாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சாஜத் கடெர்ஸடெஹ் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக