சீனாவின் வடகிழக்கு மாகாணமாகிய லியோனிங்கை சேர்ந்த காவோ யாங், தனது 12ஆவது வயதில் குரு ஒருவரை சரணடைந்தார். அவரிடம் முறைப்படி பயிற்சிகளை கற்றுக்கொண்டார். உடலையும் மனதையும் ஒருநிலைப்படுத்தும் பயிற்சியை தனது 12ஆவது வயதிலிருந்தே கற்கத் தொடங்கிவிட்டார். கடுமையாக பயிற்சிகளை மேற்கொண்ட அவர், இப்பொழுது சாதனைக்காக காத்திருக்கிறார். சிறிய கயிற்றில் நிம்மதியாக உறங்கும் பயிற்சியில் வெற்றிபெற்றிருக்கும் யாங், எதிர்வரும் சில தினங்களில் கின்னஸ் சாதனையை நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக