1000 ஆண்டுகள் பழைமையான இந்த ஜன்னல் 150 வருடங்களுக்கு மேலாக புனித அன்ட்ரூ தேவாலய சுவருக்குள் புதைந்திருந்துள்ளது. ஜன்னலின் வேலை ப்பாடுகளை ஆராய்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் வரலாற்று ஆசிரியர்களும் இந்த ஜன்னல் நோர்மன் படையெடுப்புக்கு முந்தியது எனக் கூறியுள்ளனர்.
தேவாலய புனரமைப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் ஒரு சுவரின் சீமெந்து பூச்சினை அகற்றியபோது 2 அடிக்கு ஓர் அடி விஸ்தீரணமுள்ள வெளிச்சட்டத்தினை அவதானித்தனர். பழைய கட்டடங்களை பாதுகாப்பதற்கான சங்கத்தின் நிபுணர்கள் இது 1066ஆம் ஆண்டுக்கு முன்னையது என்பதை உறுதி செய்துள்ளனர்.
இவ்வாறு 1066இற்கு முந்தைய ஜன்னல்கள் பிரித்தானியாவில் ஒருசிலதான் உள்ளன. ஆனாலும் இந்த புதிய ஜன்னல் மட்டும்தான் திறந்து மூடக்கூடிய நிலையிலுள்ளதாகும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக