33.5 அங்குல உயரமான இந்த மாடு 2011 ஆம் ஆண்டு கின்னஸ் உலக சாதனைப் புத் தகத்தில் உலகின் சிறிய மாடாக இடம்பெறுகிறது.
11 வயதான மேற்படி மாடு தற்போது கர்ப்பமாக உள்ளதாகவும் அது ஏற்கனவே 9 கன் றுகளை ஈன்றுள்ளதாகவும் அதனது உரிமையாளரான கரோலின் ரைடர் தெரிவித்தார்.
1999 ஆம் ஆண்டு பேர்க்ஷியலுள்ள நியூபெரி எனும் இடத்தில் பிறந்த இந்த மாட்டை 2006 ஆம் ஆண்டு ஏல விற்பனையில் ரைடரின் குடும்பம் கொள்வனவு செய்திருந்தது.
ஸ்வலோவின் கால்கள் மிகவும் சிறியதாக உள்ளதால் அதனால் வேகமாக நடக்க டியாதுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தின் புதிய பதிப்பு நேற்று வியாழக்கிழமை வெளி யிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக