சட்டத்தரணியான ஸென் ஸியவோமி எனும் சீனப்பெண்மணி "ஆவ்ரர் ஷொக் 27" எனும் திரைப்படத்தைப் பார்ப்பதற்காக வட ஸியன் நகரிலுள்ள பொலிபோனா சர்வதேச திரையரங்கிற்கு சென்றிருந்தவேளை படம் ஒளிபரப்பப்படுவதற்கு முன்னர் வர்த்தக விளம்பரம் ஒன்றினை 20 நிமிடங்கள் வரை ஒளிபரப்பியதால் தனது நேரம் விரயமாக்கப்பட்டதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருப்பதாக அப்பெண்மணி உள்நாட்டு ஊடகங்களுக்கு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் வட பொலிபோனா சர்வதேசத் திரையரங்கு மற்றும் பட விநியோகஸ்தர்களான குவாயி சகோதரர் ஊடக கூட்டு நிறுவனம் என்பன முன் விளம்பரங்களை எவ்வளவு நேரம் ஒளிபரப்பியுள்ளன%27 என்பதைக் கூற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொலிபோனா மற்றும் குவாயி சகோதரர்கள் தனது நேரத்தை விரயமாக்கியதுடன் தெரிவுக்கான சுதந்திரத்தை மீறியுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த வழக்கினை ஸியனிலுள்ள மக்கள் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ள அதேவேளை விசாரணைகள் எப்போது இடம்பெறும் என்பது தொடர்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் படம் பார்ப்பதற்கான நுழைவுச் சீட்டைப் பெறுவதற்கு அவர் செலவழித்த 35 யுவான்களையும் (5.20)மீள அளிப்பதுடன் மனக்குழப்பத்தை ஏற்படுத்தியதற்காக 35 யுவான்களை நஷ்ட ஈடாக தனக்கு வழங்க வேண்டும் என்பதுடன் திரையரங்க உரிமையாளர் மன்னிப்புக் கோரவேண்டும்%27எனவும் சென் தனது மனுவில் வலியுறுத்தியிருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை விளம்பரங்களை திரைப்பட இணையத்தளங்களில் ஒளிபரப்புமாறும் வர்த்தக விளம்பரங்களை 5 நிமிடங்களுக்கு குறைவாக ஒளிபரப்பும்படியும் சென் குறித்த திரையரங்கிற்கு அறிவுறுத்தியுள்ளார்.
650 மில்லியன் யுவான் செலவில் தயாரிக்கப்பட்ட "ஆவ்ரர் ஷொக் 27 என்னும் இத்திரைப்படம் சீனாவில் 1976 இல் இடம்பெற்ற பூகம்பத்தில் அழிவடைந்த ஒரு நகரைப் பற்றிய கதையைக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக