சென்ற ஞாயிற்றுக்கிழமை ஒதுக்குப் புறமான தொழிற்சாலை ஒன்றிற்கு அருகாமையில் தமது காரை நிறுத்திவிட்டு, நச்சுத் திரவத்தையும், பதார்த்தங்களையும் உட்கொண்டு அவ்விருவரும் தற்கொலைசெய்துகொண்டுள்ளனர்.
திங்கட்கிழமை தொழிற்சாலைக்குச் சென்ற தொழிலாளி ஒருவர் இவர்கள் காரில் இறந்து கிடப்பதை அவதானித்து பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.
காரின் கண்ணாடிகளில், காருக்கு உள்ளே நச்சுத் திரவங்கள் இருப்பதாகவும், ஜாக்கிரதையாகக் கையாளவும் எனவும் எழுதி ஒட்டப்பட்டுள்ளது. கார் கதவுகளை திறந்தால் மூச்சுத் திணறல் ஏற்படலாம் எனவும் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்து பொலிசார் அதிர்ந்து போனார்கள்.
அவர்கள் கடைசியாக உபயோகித்த கம்பியூட்டரில் இருந்து, தற்கொலைக்கு நான் தயார், அதற்காக நச்சுத் திரவங்களும் தயார் என்ற சட்டிங் வாசகங்கள் இருந்ததை கண்டனர் .
இறந்த அந்த பெண்ணுக்கு அனொரெக்ஸியா நேர்வொஸா எனும் வியாதி இருப்பதாகச் சொல்லப்பட்டலும், அது சாவுக்கு காரணம் இல்லை எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காரணம் அந்த வியாதிக்காக அப்பெண் மேற்கொண்டுவரும் NHS சிகிச்சை நல்ல பலனை அளித்துள்ளதுடன் அவ்வியாதியிலிருந்து வெகுவிரைவில் பூரண குணமடைந்து விடுவார் என்று பொலிசார் தெரிவிக்கிறார்கள்.
மேற்கொண்டு விசாரணைகள் தொடர்கின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக