வு ஹான் (43 வயது) என்ற மேற்படி நபர் கார் விபத்தில் மூளையில் காயம் ஏற்பட்டதால் கடுமையான ஞாபகசக்தி இழப்பிற்கு ஆளானார்.
அவரால் எதையும் ஞாபகப்படுத்த முடியாதிருந்ததுடன் வீட்டை விட்டு செல்கையில் தனது வசிப்பிடம் எது என்பதையே மறந்து விடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அவரது மனைவி மிங்மெயி, ஹானுக்கு ஞாபகசக்தியை தக்க வைப்பதற்கான மருந்துகளைப் பெற பணத்தை தண்ணீராக செலவழித்தார்.
எனினும் கிழக்கு சீனாவில் தாய்ஸொயு எனும் இடத்திலுள்ள உள்ளூர் மருத்துவ மனை தற்போது அவர் கேட்ட மருந்துகளை வழங்க மறுத்துள்ளது.
இதனையடுத்து, ஞாபகசக்தியை இழந்த தனது கணவர் வழிதவறி சென்றுவிடாமல் இருக்க அவரை மிங்மெயி கூண்டில் அடைத்து வைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக