புதிய புத்தகம்
பிரான்ஸ் முதல் பெண் மணி கார்லா புரூணி ஒரு பச்சோந்தி எனவும் அவர் ஜனாதிபதி சார்க்கோஸிக்கு ஓர் அரசியல் சுமையாக மாறியுள்ளதாகவும் புதிய புத்தகம் ஒன்று தெரிவிக்கிறது.
பிரபல புலனாய்வு எழுத்தாளர் பெஸ்மா லாஹோயால் எழுதப்பட்ட “கார்லா: ஏ சீக்ரெட் லைப்' என்ற புத்தகத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அவர் ஒரு பச்சோந்தி“.
அவர் தோற்கடிக்க முடியாத நடிகையாக தனக்குத் தானே பயிற்சி கொடுத்துள்ளார். பிரான்ஸ் மக்கள் தமது முதல் பெண்மணி பற்றி அறியவில்லை. அவரின் கவலைகள் பிரான்ஸ் மக்களுடையவற்றை விட வேறுபட்டது'' என பெஸ்மா லாஹோ தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த புத்தகத்தில் கார்லா புரூணியின் காதலர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
ஆங்கில ரொக் இசை நட்சத்திரங்களான மைக் ஜகர், எறிக் கிளப்டன் மற்றும் பாரிஸைச் சேர்ந்த பிளாஸ்க் சத்திர சிகிச்சை நிபுணர் ஆகியோர் கார்லா புரூணியின் காதலர்கள் பட்டியலில் உள்ளடங்குகின்றனர்.
பெயர் வெளியிடப்படாத மேற்படி பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணருடன் கார்லா புரூணி தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட ரீதியிலும் 20 வருடங்களுக்கு மேலாக பழகி வருவதாக அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனது இளமையை பேண ஊசி மருந்துகளை ஏற்றி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கார்லா புரூணி தான் அழகை மேம்படுத்த எந்த வொரு பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சையையும் மேற்கொள்ளவில்லை என வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக