புயனொஸ்அயர்ஸ் மாகாணத்தில் புளோரென்சியோ வரேலாவிலுள்ள வயலில் அமைந்துள்ள கிணற்றில் விழுந்த வனேஸ்ஸா மமானி என்ற இந்த சிறுமியை 6 மணி நேரம் போராடி மீட்புப் பணியாளர்கள் மீட்டெடுத்துள்ளனர்.
சிறுமி அதிர்ச்சியடைந்து போயுள்ளதாகவும் உடல் ரீதியாக எதுவித பாதிப்பும் அவருக்கு இல்லை எனவும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரி வித்தனர்.
மருத்துவமனைக்கு நேரில் சென்று குழந்தையை பார்வையிட்ட ஆர்ஜென்டீனா ஜனாதிபதி கிறிஸ்ரினா கிர்செனர், இக்குழந்தை காப்பாற்றப்பட்டமை அபூர்வமான நிகழ்வென தெரிவித்தார்.
இந்த குழந்தையை மீட்கும் பணி ஆர்ஜென்டீனா தொலைக்காட்சி சேவையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
மேற்படி குழாய் கிணற்றில் வயது வந்த ஒருவர் இறங்கி குழந்தையை காப்பாற்ற முடியாத வகையில், அதன் அகலம் மிகவும் குறுகியதாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சிறுமியை மேலே கொண்டு வருவதற்கு வசதியாக கயிற்றில் கட்டப்பட்ட பாரந்தூக்கியொன்று குழாய் கிணற்றில் இறக்கி விடப்பட்டது.
3 வயதான மேற்படி சிறுமி மீட்புப் பணியாளர்கள் கூறும் அறிவுறுத்தல்களை செவிமடுத்து அதன்படி செய்வாரா என்ற சந்தேகம் ஆரம்பத்தில் நிலவியது.
ஆனால் வனேஸ்ஸா மமானி அறிவுறுத்தல்களின் பிரகாரம் செயற்பட்டு மீட்புப் பணியாளர்களுக்கு ஒத்துழைத்ததாகக் கூறப்படுகிறது.




































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக