அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமொன்றில் குறித்த தம்பதியினர் பங்கேற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் நாட்டுக்குள் பிரவேசித்து பின்னர், அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்றில் கலந்து கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கட்டார் எயர்வேயிஸ் விமானமொன்றின் மூலம் குறித்த இருவரும் இன்று இரவு நாடு கடத்தப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு கடத்தப்படவுள்ள குறித்த லெபனான் பிரஜையான முஹமட் ஹோடாயட் அந்நாட்டு ஜனநாயக இளைஞர் ஒன்றியத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முஹமட் ஹோடாயட் மற்றும் அவரது மனைவி ஆகியோர் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதாக தமக்குப் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்ததாகவும், உடனடியாக அவர்களை நாடு கடத்தத் தாம் தீர்மானித்ததாகவும் சூளானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
ஜனநாயக தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்தும் நெத்தி மற்றும் அவருடன் சென்ற குழுவினர் யாழ்ப்பாணத்தில் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 16 ஆம் திகதி கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டமைக்காக லெபனான் ஜனநாயக இளைஞர் சங்கத்தின் தலைவர் மொஹமட் ஹொக்டெக்கையும் அவரது மனைவியையும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஹோட்டெக்கும் அவரது மனைவியும் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த 14 ஆம் திகதி இலங்கை வந்திருந்தனர்.
சர்வதேச அரசியல் மகாநாடுகளில் அறிமுகமாகியிருந்த சுனில் ஹந்துநெத்தி தாக்கப்பட்டமையைப் பத்திரிகைகள் மூலம் அறிந்தே தாம் மேற்படி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக குற்றவியல் புலனாய்வுப் பிரிவுக்கு அவர் வாக்கு மூலம் வழங்;கியிருந்தார்.
இவரும் இவரது மனைவியும் கட்டுகஸ்தோட்டையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டிருந்தனர்.







































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக