குறித்த இல்லத்தின் பெறுமதி 500 கோடி ரூபாய் என லங்கதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.இந்த இல்லத்தை விற்பனை செய்து அந்தப் பணத்தை புலிகளின் சர்வதேச வலையமைப்பிடம் ஒப் படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப் பட்டுள்ள புலிச் சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது கிடைக்கப் பெற்ற தக வல்களின் அடிப்படையில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவர்களின் ஒருவரான கிருஷ்ணப்பிள்ளை சிவஞானம் என்பவர் இலங்கையில் தங்கியிருந்த காலத்தில் இந்த வீடு நிர்மாணிக் கப்பட்டுள்ளது. பணத்தை சர்வதேச வலைமைப்பிற்கு அனுப்பி வைத்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைத்து விசாரிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.





































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக