இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக எதிர்வரும் 25ஆம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இவ் விஜயத்தின் போது அவர் யாழ்ப்பாணம் மற்றும் அம்பாந்தோட்டையில் இந்தி யத் துணைத் தூதரங்களை திறந்து வைக்க வுள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட் டுள்ள துணைத் தூதரகத்தை திறந்து வைப்பதற்காக 27ஆம் திகதி அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இங்கு வரவுள்ளார். யாழ்.குடாநாட்டில் இந்தியாவின் துணைத் தூதரகத்தை திறந்து வைத்த பின்னர் இலங் கை இனப்பிரச்சினை குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவார் என இந்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் இனப்பிரச்சினை குறித்து இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை கிருஷ்ணா வெளிப்படுத்துவார் எனில் அது இந்தியாவின் சிந்தனைப் போக்கை அறி வதற்கான சந்தர்ப்பமாக அமையும் என கொழும்பு ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக் பொதுநல வாய நாடுகளின் விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள புதுடில்லிக் குச் சென்றிருந்தபோது அவரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கையின் இனப்பிரச் சினைக்கு துரிதமாக அரசியல் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார்.
இந் நிலையில் இந்தியப் பிரதமரின் இக் கோரிக்கை தொடர்பில் உடனடிப் பலன் ஏதும் கிடைக்காத நிலையில் தங்களது நிலைப்பாடு என்ன என்பதை யாழ்ப்பாணத்தில் வைத்து கிருஷ்ணா தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை இந்தியாவின் அயல் நாடு ஒன்றில் ஜனநாயகம், மனித உரிமைகள் மற் றும் சிறுபான்மை இன மக்களின் உரிமை கள் என்பன மறுக்கப்படும் போது அவற்றுக் கெதிராக இந்தியா குரல் கொடுப்பது அந்நாடு களின் இறையாண்மையில் அது தலையிடுவ தாக அமையாது என அண்மையில் இந்தியா வுக்கு விஜயம் செய்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியிருந்தார்.
இங்கு அயல்நாடு என அமெரிக்க ஜனாதி பதி பராக் ஒபாமா இலங்கை போன்ற நாடு களையே குறிப்பிட்டு சொல்லியிருப்பார் என நம்பப்படுகிறது.இவ்வாறு தனது அயல் நாடுகளில் ஜன நாயக உரிமைகள் மறுக்கப்படும் போது அது குறித்த கேள்வி எழுப்ப வேண்டியது ஜன நாயக நாடான இந்தியாவின் கடமைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இலங்கை அரசாங்கத்துக்கும் சீனாவுக் கும் இடையிலான உறவுகள் மேலும் வலு வடைந்து வருகின்ற நிலையில் இனப்பிரச் சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என அமெரிக்கா அழுத்தங்களை பிரயோகிப்ப தாக கொழும்பு ஊடகங்கள் தெரிவிக்கின் றன. இந் நிலையில் அமெரிக்காவினது கருத் துக்களையும் மனதில் கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா கொழும் புக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அதேவேளை யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரகத்தை திறந்துவைக்க செல் லும் அவர் வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் தேவைக்காக 100 உழவு இயந்திரங்களையும் கையளிக்கவுள்ளார்.இந்தியாவின் மகேந்திர நிறுவன தயாரிப் புக்களான இந்த உழவு இயந்திரங்கள் முகப் பில் இந்திய அரச குறியீடான அசோகச் சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது. வடக்கின் விவசாயம் மற்றும் பொருளா தார அபிவிருத்திகளுக்கு உதவி வழங்குவ தாக இந்தியா வழங்கிய உறுதி மொழியின் ஒரு பகுதியாக இந்த உதவிகள் வழக்கப்படவுள்ளன.
இந்தியாவின் உதவியுடன் வடக்கில் நிர்மாணிக்கப்படவுள்ள 50 ஆயிரம் வீடுகளில் ஆயிரம் வீடுகளை முதலில் நிர்மாணிப்பதற்காக உடன்பாடு செய்து கொள்ளப்பட்டுள்ளது.





































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக