வாழைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தலைவர் வடிவேல் ராமச்சந்திரன், சந்தேக நபர் வேன் ஒன்றை திருடிய சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாக வழங்கிய தகவலை அடுத்தே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர் அஜீத் என தெரியவந்துள்ளது. இவர் ஏற்கனவே கடந்த ஒக்டோபர் மாதம் நுவரெலியா காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
2006 ஆம் முதல் 2007 ஆம் ஆண்டு வரை கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோர் இணைந்து செயற்பட்ட காலத்தில் கடத்தல்கள், கொலைகள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டிருந்தார். இந்த நிலையில் ரவிச்சந்திரன், அஜீத் மற்றும் ஜெந்தன் ஆகியோர் முஸ்லீம் நபர் ஒருவரிடம் இருந்து வேன் ஒன்றை தமது பாவனைக் பறித்துள்ளனர். பின்னர் அதில் மாற்றங்களை செய்து, மற்றுமொரு முஸ்லீம் நபரிடம் விற்பனை செய்துள்ளனர்.
இந்த நிலையில் வேனின் உரிமையாளர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ரவிச்சந்திரன் கைதுசெய்யப்பட்டார். அஜீத் என்பவர் பல குற்றச் செயல்களுடன் தொடர்புள்ளவர் எனவும் ஜெந்தன் என்பவர் எவ்வித வருமானமும் இல்லாமல் தொடர்மாடி வீடுகளுக்கு உரிமையாளராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.




































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக