கல்வின் ரைட் (46 வயது) என்ற மேற்படி நபர் கடுமையான காது வலிக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே அவரது காதில் முத்து ஒன்று இருப்பது மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
தான் பல வருட காலமாக கேட்கவும் பேசவும் சிரமத்தை எதிர்கொண்டிருந்ததாகவும் அதற்கான காரணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை தெயாதிருந்து வந்ததாகவும் கல்வின் ரைட் கூறினார்.
5 வயதாக இருக்கும் போது தான் தனது சகோதரியுடன் இணைந்து தமது தாயாரின் முத்தாலான கழுத்தணியுடன் விளையாடியபோது அது உடைந்து முத்துகள் சிதறியதாக கூறிய கல்வின் ரைட், அச்சமயம் தனது சகோதரி தனது காதில் இரு முத்துக்களை விழ விட்டதால் தான் கடுமையான காது வலிக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதன்போது காதிலிருந்த இரு முத்துகளையும் அகற்றி விட்டதாக உறுதியளித்து மருத்துவர்கள் கல்வின் ரைட்டை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதன்போது மருத்துவர்களால் தவறவிடப்பட்ட முத்தொன்றே கல்வினின் காதிலிருந்து அவரை இத்தனை வருட காலமாக துன்பப்படுத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக