ஷாங்டொங் மாகாணத்தில் ஜினான் நகரிலேயே “தலு ரோபோ' என்ற மேற்படி உணவகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதற்காக 12 க்கும் மேற்பட்ட ரோபோக்கள் சேவையிலீடுபடுத்தப்பட்டுள்ளன.
நகரும் நாடா முறைமையின் கீழ் உணவுகளை ஏந்தியவாறு உணவகத்தை சுற்றி வரும் உணவு பரிமாறும் ரோபோவானது எவராவது அதன் வழியில் கையை நீட்டும் பட்சத்தில், அந்த ரோபோவிலுள்ள உணர்கருவிகள் அதனை கிரகித்து ரோபோவை அவ்விடத்தில் உணவுடன் ஸ்தம்பிதமடைந்து நிற்க வைக்கின்றன.
இந்த உணவக மானது சீனாவிலேயே அதிகளவில் ரோபோ ஆதிக்கம் செலுத்தும் முதலாவது உணவகமாக விளங்குகிறது.
இந்த உணவகத்தில் வரவேற்பு பகுதியிலுள்ள ரோபோவானது கவர்ச்சிகரமாக புன்னகைத்து வாடிக்கையாளர்களை வரவேற்கிறது.
இது தொடர்பில் மேற்படி உணவகத்தின் உமையாளர் ஸாங் யொங்பி விபரிக்கை யில், எதிர்வரும் மாதங்களில் இந்த உணவகத்தில் 30 க்கு மேற்பட்ட ரோபோக்களை வேலையிலீடுபடுத்தவும் முற்று ழுதாக மனிதனையொத்த தோற்றப்பாட்டையுடைய ரோபோக்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக